LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கிரகம்

வாணியல் ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த கிரகத்தை கண்டறியும் விஞ்ஞானத்தில் இறங்கியுள்ளன. சந்திரனில் விண்கலத்தை இறக்கி அங்கிருக்கும் வியப்பூட்டும் ஆச்சரியங்களை ஆராய்வதில் அறிவிக்கப்படாத போட்டி நிலவி வருகிறது. அதில் தற்போது இந்தியாவின் சார்பில் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றால் அதில் ஐயமில்லை.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளதாக ஒரு நாடு தம்பட்டம் அடித்துக்கொண்டது. சூரியனின் அணுக்கூறுகளை ஆராயவே முடியாத போது எப்படி செயற்கை சூரியனை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நான் ஆச்சரியங்களை அள்ளி வீசும் விண்வெளி புரியாத புதிராகவே உள்ளது. 
விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தபோதும் சில நேரங்களில் அந்த ஆராய்சியும், கண்டுபிடிப்பிகளும் தோல்வியில் முடிந்துவிடுகிறது. அப்படி கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தாலும் ஆராய்ச்சிகள் குறைந்தபாடில்லை.
இதனிடையே புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து அது தற்போது வைரலாகியுள்ளது. 
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, "சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.
இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் உள்ளது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரிய குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது.
சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் உள்ளது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாணியல் ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த கிரகத்தை கண்டறியும் விஞ்ஞானத்தில் இறங்கியுள்ளன. சந்திரனில் விண்கலத்தை இறக்கி அங்கிருக்கும் வியப்பூட்டும் ஆச்சரியங்களை ஆராய்வதில் அறிவிக்கப்படாத போட்டி நிலவி வருகிறது.

அதில் தற்போது இந்தியாவின் சார்பில் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றால் அதில் ஐயமில்லை.இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளதாக ஒரு நாடு தம்பட்டம் அடித்துக்கொண்டது. சூரியனின் அணுக்கூறுகளை ஆராயவே முடியாத போது எப்படி செயற்கை சூரியனை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாளுக்கு நான் ஆச்சரியங்களை அள்ளி வீசும் விண்வெளி புரியாத புதிராகவே உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தபோதும் சில நேரங்களில் அந்த ஆராய்சியும், கண்டுபிடிப்பிகளும் தோல்வியில் முடிந்துவிடுகிறது. அப்படி கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தாலும் ஆராய்ச்சிகள் குறைந்தபாடில்லை.

இதனிடையே புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து அது தற்போது வைரலாகியுள்ளது. 


சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, "சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் உள்ளது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.

குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது. சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் உள்ளது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

by Kumar   on 07 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.