LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 26 ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் டிசம்பர் 11 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே. தங்கவேலு தலைமையேற்றார்.
 
பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புடன் கூடிய விழா அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
 
பேராசிரியர் த. ராஜாராம் புதுமைப்பித்தன் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவர் தமது உரையில் பாரதியின் தனித்தன்மையை சிலாகித்து விளக்கிப் பேசினார். விருதாளர் தகுதிப் பட்டயத்தை பேரவையின் துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் வாசித்தார். பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு பாரதி விருதை வழங்கி விழாச்சிறப்புரையாற்றினார். பாரதி விருது கேடயம் , தகுதிப் பட்டயம் மற்றும் ரூ 50,000 பரிசுத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 
 
89 ஆம் வயதில் அடியெடுத்து வைக்கும் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேரவையின் விருது தனித்தன்மை வாய்ந்தது என்பதை விளக்கிப் பேசியதோடு பாரதியின் பரிமாணங்களை எடுத்துரைத்தார். மக்கள் சிந்தனைப் பேரவை எத்தகைய சிந்தனை மரபை அடியொற்றியது என்பதையும் ஆய்வு நோக்கில் எடுத்துரைத்தார்.
 
விருதாளர் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி ஏற்புரை நிகழ்த்தினார். இவர் தனது ஏற்புரையில் இவருக்கு முன்னர் பேரவை சார்பில் பாரதி விருது பெற்றோரின் தனிச் சிறப்புகளையும் மேம்பட்ட தகுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார். அவ்வரிசையில் தாம் விருது பெற்றிருப்பது பெருமிதமளிப்பதாகக் கூறினார். நிறைவாக பேரவைச் செயலாளர் ந. அன்பரசு நன்றி கூறினார்.
 
மிகவும் பெரிதும் பிரம்மாண்டமுமான கொங்கு கலையரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர். ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் இளையோர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றதும் அவர்கள் இறுதிவரை உன்னிப்பாக உரைகளைக் கேட்டதும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
 
பேரவையின் சீருடையுடன் நடைபெற்ற வீரார்ந்த மாணவர் அணிவகுப்புக்கு மகுடமாக விளங்கிய பாரதி ஜோதியை விருதாளர் பெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியூட்டியது. முன்னதாக பாரதி ஜோதியை பாரதி இறுதிப் பேருரை நிகழ்த்திய கருங்கல்பாளையம் நூலகத்தில் மாலை 4 மணிக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் பேராளர் கொளந்தவேல் ராமசாமி ஏற்றி மாணவர் அணிவகுப்பைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
 
மொத்தத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நிகழ்வு எழுச்சியும் நெகிழ்ச்சியும் மிக்கதாக விளங்கியது. சென்னை உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வருகை புரிந்து இந்நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் இது ஒரு மாநிலந்தழுவிய நிகழ்வாகத் திகழ்ந்தது.
by Swathi   on 16 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.