LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வெகு சிறப்பாக நடந்தேறியது 2015 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா

அமெரிக்காவின் வளைகுடா பகுதியில் ஜுலை 4,5 தேதிகளின் வெகு சிறப்பாக நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா (FeTNA)-வில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழர்கள் விமானம் மூலமாகவும், மகிழுந்திலும் பயணித்து வந்து கொண்டாடினார்கள். இவ்வாண்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் விரிகுடாப்பகுதி என்பதால் இது மேலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் தமிழர்களின் தொன்மையான கலைகள்,பறையிசை நிகழ்ச்சி, சிறார்களின் பாபநாசம் சிவன் பாடல்கள் மற்றும் சேர்த்திசை, ‘ஆர்த்தெழு நீ’  பல மாநிலங்களிலிருந்து கவிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி,பல மாநிலங்களிலிருந்து வரும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கும் தரமான இலக்கிய வினாடி வினா, தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் நிலை குறித்த உரை, பேரவையின் பல தமிழ்ச்சங்கங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், தமிழினத்தின் உரிமை குறித்த கருத்தரங்கம்,விரிகுடாப்பகுதியின் திறமைவாய்ந்த கலைஞர்களின் கரகாட்டம்- சிலம்பம்- பறை- பரதம் போன்ற தமிழ் மரபுக்கலைகள் ,2014-ம் ஆண்டின் சாகித்திய அகெதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி. திருச்சி கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்களின் வி.ப.கா. சுந்தரம் நினைவுரை,  திரைப்படப்பாடகர்கள் ஹரிசரன், ஆலாப் ராஜு, ரோஷினி , மகிழினி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பூஜா, பிரகதி மற்றும் விஜய் டிவி புகழ் "பென்னட் இசை குழு"வினருடன்  இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி , சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள், தொழில்முனைவோர் சந்திப்புகள், சித்த மருத்தவப் பயிற்சிப் பட்டறை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழக சந்திப்பு, ATMA – FeTNA CME Program, Youth Forum,TAMIL MUSIC AND MUSICIANS, இலக்கியம், இசை , சினிமா , கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என்று இந்த இரண்டு நாட்களும் தமிழர்களின் திருவிழாவாக பேரவை விழா நடந்து வருகிறது. 
இதில் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், நடிகர் மாதவன், முனைவர் சௌமியா, கவிமாமணி அப்துல் காதர் ,பட்டிமன்ற பேச்சாளர் , எழுத்தாளர் சுமதி ஸ்ரீ, தி.உதயசந்திரன்,இ.ஆ.ப (IAS), நிதித் துறைச் செயலாளர், மகிழினி மணிமாறன், எழுத்தாளர் பூமணி ,முனைவர் ராஜம் ,முனைவர் விஸ்வநாதன் , முனைவர் ஜகத்ரட்சகன் ,கல்யாண மாலை மோகன், படவா கோபி, அப்துல் ஹமீத் ,பாடகர் ஹரிசரன், முனைவர் மார்கரெட் பாஸ்டின் ,பூ உலகின் நண்பர்கள் சுந்தர ராஜன் போன்ற பல துறை பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்கள். 
விழா புகைப்படங்கள்:


இதில் தமிழர்களின் தொன்மையான கலைகள்,பறையிசை நிகழ்ச்சி, சிறார்களின் பாபநாசம் சிவன் பாடல்கள் மற்றும் சேர்த்திசை, ‘ஆர்த்தெழு நீ’  பல மாநிலங்களிலிருந்து கவிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி,பல மாநிலங்களிலிருந்து வரும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கும் தரமான இலக்கிய வினாடி வினா, தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் நிலை குறித்த உரை, பேரவையின் பல தமிழ்ச்சங்கங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், தமிழினத்தின் உரிமை குறித்த கருத்தரங்கம்,விரிகுடாப்பகுதியின் திறமைவாய்ந்த கலைஞர்களின் கரகாட்டம்- சிலம்பம்- பறை- பரதம் போன்ற தமிழ் மரபுக்கலைகள் ,2014-ம் ஆண்டின் சாகித்திய அகெதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி. திருச்சி கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்களின் வி.ப.கா. சுந்தரம் நினைவுரை,  திரைப்படப்பாடகர்கள் ஹரிசரன், ஆலாப் ராஜு, ரோஷினி , மகிழினி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பூஜா, பிரகதி மற்றும் விஜய் டிவி புகழ் "பென்னட் இசை குழு"வினருடன்  இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி , சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள், தொழில்முனைவோர் சந்திப்புகள், சித்த மருத்தவப் பயிற்சிப் பட்டறை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழக சந்திப்பு, ATMA – FeTNA CME Program, Youth Forum,TAMIL MUSIC AND MUSICIANS, இலக்கியம், இசை , சினிமா , கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என்று இந்த இரண்டு நாட்களும் தமிழர்களின் திருவிழாவாக பேரவை விழா நடந்தேறியது.


இதில் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், நடிகர் மாதவன், முனைவர் சௌமியா, கவிமாமணி அப்துல் காதர் ,பட்டிமன்ற பேச்சாளர் , எழுத்தாளர் சுமதி ஸ்ரீ, தி.உதயசந்திரன்,இ.ஆ.ப (IAS), நிதித் துறைச் செயலாளர், மகிழினி மணிமாறன், எழுத்தாளர் பூமணி ,முனைவர் ராஜம் ,முனைவர் விஸ்வநாதன் , முனைவர் ஜகத்ரட்சகன் ,கல்யாண மாலை மோகன், படவா கோபி, அப்துல் ஹமீத் ,பாடகர் ஹரிசரன், முனைவர் மார்கரெட் பாஸ்டின் ,பூ உலகின் நண்பர்கள் சுந்தர ராஜன் போன்ற பல துறை பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


சங்கங்களின் சங்கமம்  வளைகுடா தமிழ் மன்றம், டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் சார்பில் இடம்பெற்றது. மினசாட்டோ தமிழ்ச்சங்க சார்பில் பொய்க்கால் குதிரை நடனம் சனிக்கிழமை நடைபெற்றது. விழா மலரை வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் வெளியிட, திருச்சி கலைக் காவிரி கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். மார்கரெட் பாஸ்டின் மற்றும் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வைதேகி ஹெர்பர்ட் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து புரவலர் பால் பாண்டியன், பேராசிரியர் விட்சல் , டாக்டர் பழனியப்பன் மற்றும் டாக்டர் வி.எஸ் ராஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


விஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.ஜி.விஸ்வ நாதன், இந்திய துணைத் தூதர் வெங்கடேசன் அசோக் மற்றும் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

2016-ம் ஆண்டு பேரவை விழா நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்த இருக்கிறது என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. 


விழா புகைப்படங்கள்:http://www.valaitamil.com/FETNA-2015-photo184-793-0.html

KARUMUTTU T KANNAN,Thiagarajar Group of Companies
by Swathi   on 04 Jul 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.