LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஆர்வர்டு பல்கலைக்கழகத் தமிழிருக்கை பேராசிரியை முனைவர் மார்த்தா செல்பி தம் பணியைத் தொடங்கி ஓராண்டு நிறைவு விழா

அக்டோபர் 16, 2023
தமிழிருக்கையின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் வணக்கம்!
 
ஆர்வர்டு பல்கலைக்கழகத் தமிழிருக்கைக்காக பேராசிரியை முனைவர் மார்த்தா செல்பி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம் பணியைத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் முகமாக பாஸ்டனில் வசிக்கும் நியூ இங்கிலாந்து பகுதியைச் சேர்ந்த தமிழன்பர்கள் சிலர் தமிழிருக்கைக் குழுவினருடன் இணைந்து ஒரு சிறிய சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அக்டோபர் 14 சனிக்கிழமையன்று மாலை வேளையில் ஆர்வர்டு பல்கலைக்கழக வளாகத்திலேயே இருக்கும் ஒரு தேவாலய அரங்கத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டோம். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கமாகக் கீழே தந்துள்ளோம்.
 
மரு. விஜய் ஜானகிராமன் வரவேற்றுப் பேசிய பொழுது தமிழிருக்கைக்கான ஆறு மில்லியன் அமெரிக்க வெள்ளிகளைத் திரட்டிய பயணத்தைச் சொல்லி உலக அளவில் தமிழ் மக்களும், தமிழ்நாடு அரசும் வகித்த பங்கைப் பெருமையுடன் குறிப்பிட்டார். தமிழிருக்கை அமைப்பு உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டது. எனவே ஆர்வர்டு பல்கலைக்கழக இருக்கையின் செயற்பாடுகளை அவ்வப்பொழுது தமிழிருக்கை அமைப்புக்குத் தெரிவித்து வந்தால் தாம் தம்முடைய கொடையாளர்களான உலகத்தமிழர்களுக்கு அறியத்தருவோம் என்றார். மேலும், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களாகவும், முதுமுனைவர் ஆராய்ச்சியாளர்களாகவும் தெரிவு செய்ய தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழ்த்தாயகங்களிலுள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென்று வேண்டுகோளையும் முன்வைத்தார்.
 
தமிழிருக்கை செயல்படும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்னாசியவியல் துறையின் தலைவரான முனைவர் பரிமள் பாட்டீல் தமிழிருக்கையின் செயல்பாடுகளிலும், வளர்ச்சியிலும் தமக்கும் அக்கறையிருப்பதாகக் கூறினார். தமிழிருக்கைப் பேராசிரியரான மார்த்தா செல்பியுடன் தொடர்பிலிருந்து முக்கியமான செய்திகளை உலகத் தமிழர்களுக்குச் சென்றுசேர வழிவகை செய்வேனென்றும் குறிப்பிட்டார்.
 
பேராசிரியை மார்த்தா செல்பி கடந்த ஓராண்டில் நடந்த ஆயத்தப்பணிகளைக் குறிப்பிடும் பொழுது, தம்முடன் பணிசெய்ய 2 பிஎச்டி மாணவர்களைத் தெரிவுசெய்ய ஏற்கனவே அறிவிப்புகள் செய்திருந்தோம் என்றும் அதற்காக 6 சிறந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் முடிவுசெய்வோமென்று தெரிவித்தார். முதுமுனைவர் ஆராய்ச்சிக்காக தமிழர் தாயகங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்களை அழைப்பது குறித்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்துடன் பேசி விதிமுறைகளை ஏற்படுத்தியபின் தெரிவிக்கிறோமென்றார். ஆனால் அவர்களுடைய ஆராய்ச்சி ஊதியத்தை தமிழிருக்கைக் குழுவும், பிற புரவலர்களும் ஏற்க வேண்டியிருக்கும் என்றார்.
தமிழிருக்கையும் தொடர்பிலிருந்து மிகவும் உயிர்ப்புடன் செயல்பட தமிழர்கள் ஆதரவு நல்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
 
கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அடிப்படைத் தமிழ்மொழியை இளங்கலை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஜோனாதன் இரிப்லி மாணவர்களிடையே தமிழ்மொழியைக் கற்கும் ஆர்வம் தமிழிருக்கையினால் அதிகரித்து வந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டார்.
 
தமிழிருக்கையின் அழைப்பின் பேரில் தமிழ்நாட்டிலிருந்து வந்து ஒரு மாதம் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பேராசிரியை செல்பியுடன் ஆய்வில் இறங்கியிருக்கும் தமிழ் எழுத்தாளர் திருமதி சிவகாமி ஐ.ஏ.எஸ். பேசும்பொழுது மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எப்படி தமிழிலக்கியங்களை உலகறியச்செய்யும் என்றார்.
 
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாஸ்டன் வாழ் தமிழ்மக்கள் மன்றத்தைச் சேர்ந்த திருமிதி பமீலா வெங்கட் தமிழிருக்கை அமைந்தது குறித்து பாஸ்டன் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து தம் ஆதரவை நல்கவிருப்பதாகவும் தெரிவித்தார்,
 
இறுதியாக, தமிழிருக்கைக் குழுவின் செயலாளர் முனைவர் சொர்ணம் சங்கர் நன்றியுரை வழங்கிய பொழுது அன்றையக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை மட்டுமல்லாமல் தமிழிருக்கை உருவாகப் பின்புலத்தில் அரும்பணியாற்றிய அனைவரையும் நன்றி கூர்ந்தார். அமெரிக்காவிலும் கனடாவிலும் தமிழ்த்தன்னார்வலர்கள் நடத்திவரும் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றியையும், நன்கொடையில் பங்களிப்பையும் குறிப்பிட்ட அவர் அமெரிக்காவின் பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்றுகொடுக்கப்படுவதற்கான முனைப்புகளில் ஆர்வர்டு தமிழிருக்கை உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
 
மொத்தத்தில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சி செய்ய முனைவர் பட்ட மாணவர்கள் தொடங்கவிருப்பதும், முதுமுனைவர் ஆராய்ச்சி மூலம் மேற்கத்திய ஆய்வுமுறைகளைத் தமிழ்த்தாயகங்களில் பயிலும் தமிழாய்வு மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிட்டவும் தமிழிருக்கை உதவுமென்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
உங்கள் அனைவருடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
மருத்துவர் விஜய் ஜானகிராமன்
தலைவர், தமிழ் இருக்கை அமைப்பு
வட அமெரிக்கா
 
 
October 16, 2023
Dear Friends,
I am pleased to report on my recent visit to Boston where Tamil Chair Inc. organized a gathering with the help of a few Tamils from the New England Area to celebrate the 1st anniversary of "Sangam professorship Tamil Chair at Harvard University.
 
• A total of 52 people attended the celebrations. The function started at 6 p.m. in the Christ Church Meeting Hall on the Harvard Campus. Dr. Janakiraman welcomed the gathering and briefly mentioned the journey of establishing the Tamil Chair and the prominent role played by Tamils worldwide including the government of Tamil Nadu.
• Dr. Vijay Janakiraman requested that communication between the Tamil Chair/Tamil Diaspora should occur on a regular basis and requested to have the PhD program and Post Doctoral program assist the students, especially from Tamil Nadu, Sri Lanka, Malaysia & Singapore.
• Professor Parimal Patil, the Chairman of South Asian Studies addressed the gathering and promised to assist in further growth and activities of the Tamil Chair and wanted to work with Tamil Chair Head Martha Ann Selby to establish periodic communication to update the Tamil Diaspora via Tamil Chair Inc.
• Professor Martha Ann Selby spoke next and announced that Harvard has called for Ph.D. students in the Tamil department. For 2 positions already 6 well-qualified people have applied and will get the program started soon. Regarding Post post-doctoral fellowship, she would work with the logistics but needs to be funded by TCI/Tamil Diaspora and will prioritize candidates from Tamil Nadu, Sri Lanka, Malaysia & Singapore.
• Dr. Sundaresan Sambandam greeted the gathering and wanted a continuous involvement of the Tamil Community to bring out a vibrant Tamil Department. He wanted the Tamil Diaspora to support the Tamil Chair enthusiastically.
• Mr. Jonathan Ripley, the preceptor teaching Tamil for 12 years expressed the interest of people learning Tamil and every year this is increasing with the establishment of Tamil Chair.
• Mrs. P. Sivakami, a known Tamil writer and also a former IAS officer who is on a month's invitation from Harvard explained how translation projects by Harvard University can promote the rich literature to the outside world.
• Mrs. Bamiela Venkat, representing the New England Area Tamil community, coordinated the event. She expressed her appreciation of the Tamil Chair and promised to continue the support in every way.
• Dr. Sornam Sankar, the Secretary of Tamil Chair Inc. thanked the gathering and also various people who support Tamil Chair-related events. He also highlighted the successful effort of all Volunteer-run Heritage Tamil schools all over the US and Canada which helped the fundraising. He requested the Harvard Tamil Chair to lend its support for Tamil language teaching in the K12 school system.
In summary, it is great news that Harvard is starting the Ph.D. program at Harvard in Tamil and exploring initiating a post-doctoral program specifically to train candidates in the Western way of analytic research in Tamil with the continued engagement of Tamil Chair Inc.
We are happy to add some pictures from the 1st-anniversary celebration below for your information.
Thank you for your continued support,
Dr. Vijay Janakiraman
President, Tamil Chair Inc.
by Swathi   on 01 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை  நேர்காணல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை நேர்காணல்
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா
அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்! அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!
வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி   புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது
அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் அவர்களின்  முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா! அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா!
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.