LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ்

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார்.
**************************************
டைம்டு அவுட்
**********************************
இந்த விதிமுறையை பொறுத்துவரைக்கும் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பின்போ அல்லது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினாலோ அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் கிரீஸுக்குள் வர வேண்டும் ஐசிசியின் விதி எண் 40.1.1 கூறுகிறது. இந்த விதிமுறை பிளேயிங் கண்டிஷனைப் பொறுத்து 2 நிமிடங்களாக மாற்றப்படத் தகுந்ததே. அதன்படி, உலகக் கோப்பை போன்ற போட்டிகள் என்றால் அதுவே இரண்டு நிமிடங்களுக்குள் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் வந்து அடுத்த பந்தை சந்திக்க வேண்டும் என்பது விதி. அப்படி வராதப்பட்சத்தில் நடுவர்கள் 'டைம்டு அவுட்' எனப்படும் அவுட் வழங்கலாம் என்றும் கூறுகிறது அதே விதி. என்றாலும், இந்த முறையிலான அவுட்டுக்கு பந்துவீச்சாளர்கள் யாருக்கும் எந்த கிரெடிட்டும் வழங்கப்படாது. மாறாக, ரன் அவுட் போல இந்த டைம்டு அவுட் வழங்கப்படும். ஐசிசி வகுத்துள்ள இந்த விதி, நீண்டகாலமாகவே இருந்துவந்தாலும் எந்த அணியும் இதுவரை இந்த விதியை பயன்படுத்தியதில்லை.
***********************************************************
நடந்து என்ன? 
*************************************
6-11-2023-ம் தேதி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. சற்றே தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை அணி 24.2 ஓவர்களில் 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரமா அவுட் ஆன பின், இலங்கையின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க வந்தார். ஆனால், தான் அணிந்துவந்த ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக இல்லாததால் அதனுடன் போராடிக்கொண்டிருந்தார் மேத்யூஸ். இதனால் முதல் பந்தை எதிர்கொள்ள தாமதமாக்கினார்.
*************************************************
ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்ஸ் சரிவர வேலை செய்யாததால் மாற்று ஹெல்மெட் வாங்க அணியின் உதவியை நாடிய அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி கேப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் டைம்டு அவுட் விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஹெல்மெட் ஸ்ட்ராப்ஸ் பிரச்சினை, அதனால்தான் லேட் ஆனது என்றும் அப்பீலை வாபஸ் பெறும்படியும் வங்கதேசகேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் மேத்யூஸ் முறையிட்டார். ஆனால் ஷாகிப் அல் ஹசன் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' எல்லாம் பார்க்காமல் விதிமுறையின் கீழ் அப்பீலை வாபஸ் பெற மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இதனையடுத்து, விரக்தியில் மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் கடும் கோபத்துடனும் பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.
************************************************
இந்த விதிமுறையின் நீட்சி என்னவெனில் 3 நிமிடங்களுக்கும் மேல் பேட்டர் யாரும் களமிறங்கவில்லை எனில், நடுவர்கள் போட்டியை பவுலிங் செய்யும் அணி வென்றதாகவே அறிவிக்க முடியும். ஆனால், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அப்படி நடந்ததில்லை. லீக் மட்ட போட்டிகளில் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், அது பற்றிய விவரங்கள் இல்லை. அந்த அடிப்படையில் டைம்டு அவுட் என்ற ஒன்று இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்கிறது.
***********************************
ரசிகர்கள் சரமாரி கேள்வி
*************************************
டைம்டு அவுட் முறையை வங்கதேச கேப்டன் அணுகிய விதத்தை வைத்து அவர்மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. "ஒரு வீரர் ஹெல்மெட் சரியில்லாத காரணத்தினால் தாமதம் செய்ததை அவர் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்று பார்க்க முடியுமா? ஹெல்மெட் சரியில்லாமல் மேத்யூஸ் பவுன்சரில் தலையில் அடி வாங்கி காயமடைய வேண்டுமா" என்று ரசிகர்கள் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார்.

டைம்டு அவுட்

இந்த விதிமுறையை பொறுத்துவரைக்கும் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பின்போ அல்லது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினாலோ அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் கிரீஸுக்குள் வர வேண்டும் ஐசிசியின் விதி எண் 40.1.1 கூறுகிறது. இந்த விதிமுறை பிளேயிங் கண்டிஷனைப் பொறுத்து 2 நிமிடங்களாக மாற்றப்படத் தகுந்ததே. அதன்படி, உலகக் கோப்பை போன்ற போட்டிகள் என்றால் அதுவே இரண்டு நிமிடங்களுக்குள் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் வந்து அடுத்த பந்தை சந்திக்க வேண்டும் என்பது விதி. அப்படி வராதப்பட்சத்தில் நடுவர்கள் 'டைம்டு அவுட்' எனப்படும் அவுட் வழங்கலாம் என்றும் கூறுகிறது அதே விதி. என்றாலும், இந்த முறையிலான அவுட்டுக்கு பந்துவீச்சாளர்கள் யாருக்கும் எந்த கிரெடிட்டும் வழங்கப்படாது. மாறாக, ரன் அவுட் போல இந்த டைம்டு அவுட் வழங்கப்படும். ஐசிசி வகுத்துள்ள இந்த விதி, நீண்டகாலமாகவே இருந்துவந்தாலும் எந்த அணியும் இதுவரை இந்த விதியை பயன்படுத்தியதில்லை.

நடந்து என்ன? 

6-11-2023-ம் தேதி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. சற்றே தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை அணி 24.2 ஓவர்களில் 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரமா அவுட் ஆன பின், இலங்கையின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க வந்தார். ஆனால், தான் அணிந்துவந்த ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக இல்லாததால் அதனுடன் போராடிக்கொண்டிருந்தார் மேத்யூஸ். இதனால் முதல் பந்தை எதிர்கொள்ள தாமதமாக்கினார்.

ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்ஸ் சரிவர வேலை செய்யாததால் மாற்று ஹெல்மெட் வாங்க அணியின் உதவியை நாடிய அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி கேப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் டைம்டு அவுட் விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஹெல்மெட் ஸ்ட்ராப்ஸ் பிரச்சினை, அதனால்தான் லேட் ஆனது என்றும் அப்பீலை வாபஸ் பெறும்படியும் வங்கதேசகேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் மேத்யூஸ் முறையிட்டார். ஆனால் ஷாகிப் அல் ஹசன் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' எல்லாம் பார்க்காமல் விதிமுறையின் கீழ் அப்பீலை வாபஸ் பெற மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இதனையடுத்து, விரக்தியில் மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் கடும் கோபத்துடனும் பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

இந்த விதிமுறையின் நீட்சி என்னவெனில் 3 நிமிடங்களுக்கும் மேல் பேட்டர் யாரும் களமிறங்கவில்லை எனில், நடுவர்கள் போட்டியை பவுலிங் செய்யும் அணி வென்றதாகவே அறிவிக்க முடியும். ஆனால், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அப்படி நடந்ததில்லை. லீக் மட்ட போட்டிகளில் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், அது பற்றிய விவரங்கள் இல்லை. அந்த அடிப்படையில் டைம்டு அவுட் என்ற ஒன்று இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்கிறது.

ரசிகர்கள் சரமாரி கேள்வி

டைம்டு அவுட் முறையை வங்கதேச கேப்டன் அணுகிய விதத்தை வைத்து அவர்மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. "ஒரு வீரர் ஹெல்மெட் சரியில்லாத காரணத்தினால் தாமதம் செய்ததை அவர் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்று பார்க்க முடியுமா? ஹெல்மெட் சரியில்லாமல் மேத்யூஸ் பவுன்சரில் தலையில் அடி வாங்கி காயமடைய வேண்டுமா" என்று ரசிகர்கள் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

by Kumar   on 08 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.