LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

3 டிகிரியை நோக்கி உலக வெப்பமேற்றம்

புவியின் வெப்பம் தொழில் புரட்சிக்கு முந்தைய வெப்பத்தைவிட 2.9 டிகிரி செல்ஷியஸ் (5.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

 

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, இது தொடர்பான அறிக்கையொன்றை ஐ.நா வெளிட்டுள்ளது.

 

கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் அறிக்கை' என்று பெயரிடப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

 

அதிகமாக இருக்கும்.

 

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பம் தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே கூடுதலாக இருக்கும் அளவுக்கு புவி வெப்பமேற்றத்தைக் கட்டுப்படுத்த கடந்த 2015-ஆம் ஆண்டில் சர்வேதச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

ஆனால், அந்த இலக்கை அடையும் வகையில் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக அதிகரித்துதான் வருகிறது. இந்த நிலை நீடித்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பம் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 2.5 முதல் 2.9 டிகிரி செல்ஷியஸ் வரை (4.5 - 5.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமாக இருக்கும்.

 

உலகின் வெப்பம் அந்த அளவுக்கு அதிகரித்தால், அது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அதற்கான அறிகுறிகளை உலகம் இந்த ஆண்டே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.

2015-ஆம் ஆண்டின் பருவநிலை ஒப்பந்த இலக்கை (2030-க்குள் 1.5 டிகிரி செல்ஷியஸ்) எட்டுவதற்கு உலக நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தை 42 சவீதம் குறைக்க வேண்டியுள்ளது.

 

127 நாள்களுக்கு தொழில் புரட்சி

 

ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எரித்ததன் மூலம் நாடுகள் காற்றில் கலந்த கரியமில வாயுவின் அளவு 1.2 அதிகரித்துதான் சதவீதம் உள்ளது. 

 

இதன் காரணமாக, உலகின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி உலகின் சராசரி ஒரு நாள் வெப்பநிலை 127 நாள்களுக்கு தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரிசெல்ஷியஸை விடக் கூடுதலாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 17) மட்டும் உலகின் வெப்பமேற்றம் 2 டிகிரி செல்ஷியஸை (3.6 டிகிரி ஃபாரன்ஹீட்) தொட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.

 

195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

 

ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பம் ஈர்க்கப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

 

அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன.

 

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

 

இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரிமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் மேலும் உயர்ந்து வருவதாகவும், 2030-க்கும் அது 2.9 செல்சிஷயைத் தொடும் ஆபத்து உள்ளதாகவும் ஐ.நா. தற்போது எச்சரித்துள்ளது.

by Kumar   on 24 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
AI தொழில்நுட்பத்தால் எந்தெந்த பணிகளுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை? இந்த பட்டியல்ல உங்கள் வேலை இருக்கா? AI தொழில்நுட்பத்தால் எந்தெந்த பணிகளுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை? இந்த பட்டியல்ல உங்கள் வேலை இருக்கா?
நாம் இதுவரை பார்த்திராத நிலவின் இருண்ட பக்கதி படத்தைப் பகிர்ந்தது நாசா. நாம் இதுவரை பார்த்திராத நிலவின் இருண்ட பக்கதி படத்தைப் பகிர்ந்தது நாசா.
கூகுள் மேப்பில் அறிமுகமாகும் AI தொழில்நுட்பம் - ரசனைக்கேற்ப இனி Suggestion கிடைக்கும்! கூகுள் மேப்பில் அறிமுகமாகும் AI தொழில்நுட்பம் - ரசனைக்கேற்ப இனி Suggestion கிடைக்கும்!
2026ஆம் ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கமுடியாது. 2026ஆம் ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கமுடியாது.
வெளிநாட்டில் படிக்க இந்திய மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த நாடுகள். வெளிநாட்டில் படிக்க இந்திய மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த நாடுகள்.
நிலவில் அணுசக்தி: திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்த நாசா. நிலவில் அணுசக்தி: திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்த நாசா.
ஈரான் செல்வதற்கு, இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை! ஈரான் செல்வதற்கு, இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.