எதிர்மக் குறைக்கடத்தியும் (n type semiconductor) நேர்மக் குறைக்கடத்தியும் (n type semiconductor)பிணைக்கப்படும் போது- எதிரகத்திலிருந்து (n region) எதிர்மின்னிகள் (electrons) நேரகத்திற்கும்- நேரகத்திலிருந்து (p region) மின்குழிகள் (holes) எதிரகத்திற்கும் பாய்கின்றன; இவை முறையே எதிரகத்தில் நேரூட்டம் உடைய வழங்கணுக்களும் (+ve charged donor atoms in n region) நேரகத்தில் எதிரூட்டம் உடைய ஏற்பணுக்களும் (negative charged acceptor atoms in p region) உருவாக்குகின்றன. இந்த ஈடுகட்டாத மின்னூட்டணுக்கள் மின்புலத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மின்புலம் (electric field) மேலும் மின்னூர்திகளின் (charge carriers) விரவலை எதிர்க்கின்றன. இந்த மண்டலத்தில் சமநிலையில் (equilibrium) ஒரு மின்னழுத்தத்தை ஏற்படுத்துகிறது; இந்த மின்னழுத்தம் அளிப்பு மின்னழுத்ததிற்கு எதிர்திசையில் அமையும்