LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

கண்களுக்கு தேவையான இயற்கை மருந்துகள்

நம்மில் பலருக்கு நாளுக்கு நாள் கண் சம்பந்தபட்ட கண்புரை நோய், பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், தசை சீரழிவு போன்ற கண் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே இருகின்றன.பொதுவாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பிளஸ் துத்தநாக, ஒமேகா 3 கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்து குறைப்பாட்டால் ஏற்படுகிறது.நமது கண்களை கவசம் போல் பாதுகாக்கும் இயற்கை உணவுகளைப்பற்றி இங்கு காண்போம்.

பீனிஸ்(Beans) :

பீன்ஸில் ஜின்க் என்ற சத்து மிகவும் அதிகமாக உள்ளது.ஜின்க் சத்து கண்குறைபாட்டை போக்குவதுடன்,உங்களது உடலையும் சிலிமாக வைக்க உதவுகிறது.ஜின்க் சத்தானது பன்றி மற்றும் நாடுகோழி இறைச்சியிலும் மிகுதியாக உள்ளது.

காலிபிளவர்(Broccoli) :


காலிபிளவர் இதயத்திற்கும்,புற்று நோய்க்கும் மட்டுமல்ல கண்ணிற்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துக்கள் கண்ணின் தசை சிதைவு மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.

முட்டை(Eggs) :

முட்டைகள் பல்வேறு நோய்கள் இருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது.இதில்  துத்தநாகம், லுடீன், பி 12, வைட்டமின் டி, வைட்டமின் A மற்றும் சிஸ்டெய்ன் போன்ற சத்துகள் உள்ளன.

கோதுமை(Wheat germ) :

கோதுமையில் வைட்டமின் ஈ உள்ளதால் கண்புரை மற்றும் தசை சிதைவு போன்ற கண் குறைபாடுகள் குறைக்கப்படுகிறது.

காரட்(Carrots) :

காரட் உங்களது கண்ணுக்கு மிக சிறந்த உணவு.ஏனெனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாப்பதோடு மட்டும் இல்லாமல் கண்புரையை குறைக்கிறது.காரட்டை சாலடுகளாக செய்து சாபிட்டால் உடல் பருமனை குறைக்கும்.

வான்கோழி இறைச்சி(Turkey) :


கண்புரையை குறைப்பதில் வான்கோழி இறைச்சிதான் மிகுந்த ஆற்றல் உடைய உணவு. இதில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி உணவுகள் நமது கண்களை மிகவும் பாதுகாக்கிறது.இதனை பர்கர் வடிவில் செய்து சாப்பிட்டால் இதன் சுவை அதிகமாக இருக்கும்.

கீரைகள்(Spinach) :

கீரைகள் நமது கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிகவும் உதவியாக இருகின்றன. கீரைகளில் உள்ள  பீட்டா கரோட்டின், ஸீக்ஸாக்தைன், லுடீன், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் கண்களின் பார்வைதிறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கண்ணில் ஏற்படும் புள்ளிகள்,கண் சம்பந்த பட்ட பெரும் பிரச்சனைகளை நீக்குகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு(Sweet potatoes) :

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் சத்துகள் நமது கண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கிறது.

மத்தி மீன்(Sardines) :

பொதுவாக அனைத்து மீன் வகைகளும் நமது கண்களுக்கு மிகவும் நல்லது.குறிப்பாக மத்தி மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது கண்கள் மற்றும் இதயத்திற்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நெருப்பு கோழி இறைச்சி(Ostrich meat) :

நெருப்பு கோழி இறைச்சியில் அதிகபடியான துத்தநாத சத்துகள் உள்ளன.இந்த இறைச்சி கண்களில் ஏற்பாடு மாகுலர் திசு செயலிழப்புக்கு சிறந்த மருந்தாக கொடுக்கப்படுகிறது.

செர்ரி பழங்கள்(Cherries) :

செர்ரி பழங்களில் உள்ள  ஆண்டியாக்ஸிடண்ட்கள் நமது கண்ணில் பார்வை திறனை அதிகரிக்கிறது.மேலும் கண்கள் மற்றும் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் குழாய்களை வலுப்படுத்துகிறது.செர்ரியில் கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,வைட்டமின் ஏ,பி,சி,இ போன்ற சத்துகள் உள்ளன

பாதாம்(Almonds) :

பாதாம் கண்புரை தடுக்க உதவும் வைட்டமின் ஈ நிறைந்த மற்றும் பார்வை அதிகரிக்கிறது.

வெண்ணெய்(Avocados) :

வெண்ணெய் கண்பார்வை மேம்படுத்த,பார்வை சிதறல், பசும்படலம் மற்றும் கண்புரை போன்ற பிரச்சினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற நிரம்பியாக விளங்குகிறது.

ஆளி விதை(Flax seeds) :

ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது.இவை நமது கண்களின் மாகுலர் திசு செயலிழப்பை தடுக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதை(Sunflower seeds) :

சூரியகாந்தி விதைகலில் வைட்டமின் ஈ மற்றும் பி2 ஆகிய சத்துகள் உள்ளன.இவை நமது கண்களை அதிகமாக பாதுகாக்கின்றன.

மக்காச்சோளம்(Corn) :

மக்காச்சோளத்தில் நமது கண்களுக்கு தேவையான லுடின்,ஸீக்ஸாக்தைன்,பீட்டா கரோட்டின்,வைட்டமின் சி போன்ற சத்துகள் அதிகமாக உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி(Strawberries) :

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகசிறந்த உணவாகும்.

by Swathi   on 01 Jan 2013  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
27-Jan-2015 05:18:50 sathyamoorthy said : Report Abuse
Here i have read some important food items for Eye sight, which is very useful for life thanks for your support.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.