இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.
இந்த நிலையில் டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டதாகவும், இந்தச் சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்படப் பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
|