LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

பெரிய மனிதன்.

ஒன்றாம் வகுப்பில் படிக்கிற மோகனோட மனசுலில் அன்றைக்குத் தானொரு பெரியவனையிட்டேன் என்கிற எண்ணம் தோனியது.

அன்றைக்குத்தான் முதன் முதலா அவன் தனியாகப் பள்ளிக்கூடத்துக்குப் போறான்.

 

அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டிருக்கிற மத்தவங்களையெல்லாம் பார்த்தான். எல்லாம் அம்மா அப்பாக்களோட கையைப் புடிச்சிட்டோ, இல்லை அண்ணன், அக்காக்களோடு கையைப் புடிச்சோட்டுதான் பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டிருந்தாங்க.

 

மோகன் தனியாப் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டிருந்தான். மனசுலில் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக்கவே இல்லை. அம்மா சொன்னபடி சாலையின் வலப்பக்கமா நடந்திட்டிருந்தான்.

 

சாலையைக் கடக்கும்போது அதுக்கு என்றே போட்டிருக்கிற கருப்பு வெள்ளைக் கோடுபோட்ட இடத்தில் நின்று எல்லாரும் போகும்போது அவனும் போனான். அன்னைக்கு வகுப்புக்குள் வந்து உட்கார்ந்ததும் நண்பர்களையெல்லாம் பார்த்து "டேய் கிரி, நான் இன்றைக்குப் பள்ளிக்கூடத்துக்கு யார் கூட வந்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று கேட்டான்.

 

கிரி அப்பாகூடயாண்ணு கேட்க, இனியன் சிரிச்சுகிட்டே "அதுதான் இல்லையே , நான் தனியாத்தானே வந்தேன்''ணு பெருமையாச் சொன்னான்.

 

நாலுதெரு தள்ளித்தான் மோகனோட வீடு. இருந்தாலும் நிறய வாகனங்கள் ஓடற நெரிசலான சாலையைக் கடந்து பள்ளிக்கூடத்துக்குத் தனியா வருவது கொஞ்சம் கடினம் தான். அதுவும் அவன் ஒன்றாம் வகுப்பில் தானே படிக்கிறான். அதனால் அவன் மனசுலில் நானொரு பெரியவன் அப்படீங்கற எண்ணம் வந்திருச்சு போல

 

ஒரு வாரம் இரண்டு வாரமானது . இப்ப மோகனுக்குத் தனியாக பள்ளிக்கூடத்துக்குப் போறது ரொம்ப எளிதான காரியமாப் போனது, மனசுலில்

பயமே இல்லை. அதனால் சாலையோரங்கள்லில் இருக்கிற கடைகளையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டே வந்தான். நாளும் அப்படி வேடிக்கை பார்க்கிறது மோகனோட வழக்கமாயிருந்தது. அதில் ஒரு கடை அவனுக்கு ரொம்பப் புடிச்சுப் போனது. அது ஒரு பேக்கரி. அந்தக் கடையோட முன்னாடி ஒரு கண்ணாடி அலமாரி வச்சிருந்தாங்க.

 

அதில் விதவிதமான கேக்குகள் பார்வைக்கு வைத்திருந்தாங்க. "ஆகா.. இந்தக் கேக்குதான் உள்ளதில் ரொம்ப பெரியது. ஆகா இது ரொம்ப அழகா

இருக்கு. ஐய்யோ இதில் இருக்கிற பூ ஏவ்வளவு இனிப்பாக இருக்கும்'' கேக்குகளைப் பார்த்திட்டிருக்கும்போது அவன் மனசுலில் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிட்டே இருக்கும். ஒரு நாள் அப்படிப் பார்த்து கொண்டிடுக்கும் போது "டேய் யாருட அது? என்ன வேணும் உனக்கு'' அப்படீங்கிற சத்தம் கேட்டது. மோகன் பயந்தோ போய்டான். கல்லாப் பெட்டிக்கு அருகே இருந்த மீசைக்காரருதான் அப்படி அதட்டியது. அவ அங்கிருந்து சட்டுணு விலகிட்டான்.

 

இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஓரக்கண்ணால் கேக்குகள் வைத்திருக்கிற அலமாரியைப் பார்க்காமல் அவனால் இருக்க முடிய வில்லை. அப்ப இன்றைக்கு புதுசா எந்தக் கேக்கு வந்திருக்கு? எத்தனை கேக்கு வித்திருக்கு? நானும் ஒரு நாள் இந்தக் கடையிலிருந்து ஒரு கேக் வாங்குவேன்'' என்று நினைத்ததுமே அவனோட மூக்கில் கேக்கோட நறுமணம் ஏறியது. ஆனா நின்று நிதானமாகப் பார்க்கிறதுக்குப் பயமா இருந்தது. கல்லாப் பெட்டியிருக்கிற மீசைக்காரர் பார்த்திடுவாரோணு அவன் பயப்பட்டான்.

 

அப்படியிருக்கும்போது அவனோட பிறந்த நாள் வந்தது. மோகன் உன்னோட பிறந்த நாளுக்கு எ'' அப்படீண்ணு அப்பா கேட்கறதுக்குள்ளே "எனக்கு அந்தக் கடையிலிருந்து கேக்கு வேணும்ணு சொல்லிட்டான். "சரி வா போகலாம்''ணு இரண்டு பேரும் கேக்குக் கடைக்குப்போனார்கள்.

கடை வந்ததும் அப்பாவுக்கு முன்னாடி அவன் கடைக்குள்ளே போனான். உள்ளதிலேயே பெரிய ஒரு கேக்கைச் சுட்டிக்காட்டி "அப்பா இதை வாங்கிக் குடுங்கப்பா'' அப்படீண்ணு சொன்னான். அப்பா வாங்கிக் கொடுத்தார். இப்ப கல்லாப்பெட்டிகிட்ட இருக்லிற மீசைக்காரர் அவனை அவ்வளவு பயப்படுத்த வில்லை.

 

அடுத்த வருடம் மோகன் இன்னும் கொஞ்சம் பெரியவனாக மாறிவிடுவான். ஏன்னா அவன்கூட அவனோட தங்கச்சி மோகனாவும் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்ட வரணுமே. சாலையோட எந்தப் பக்கம் நடக்கணும். எந்த இடத்தில் சாலையைக் கடக்கணும் சாலையைக் கடக்கறதுக்கு முன்னாடி என்ன செய்யணும்ணு எல்லாம் பொறுப்பாச் சொல்லிக்கொடுத்தான்.

 

இந்தப்பொறுப்பான அண்ணனுக்கு வந்தது ஒரு சோதனை.  மோகனாவும் அதே கேக்குக் கடையைப் பார்த்து நிக்கத் தொடங்கினாள். அவன் என்ன நினைக்கிறான் என்று மோகனுக்குத்தான் அனுபவம் இருக்கே.

 

"மோகனா, கவலைப்படாதே, ஒரு நாள் உனக்கு இந்த அண்ணன் கண்டிப்பா கேக்கு வாங்கித் தருவேன். கொஞ்சநாள் பொறுத்துக்கோ'' அப்படீண்ணு சொல்லி அவளைக் கூட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போனான்.

 

இரண்டு வாரம் முடிந்தது. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தாங்க . என்ன விளையாட்டு தெரியுமா ? நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்துக்குவாங்க.   ஆளாளுக்கு ஓவ்வொரு முந்திரிக் கொட்டையை விளையாதுபவர்கிட்டே கொடுப்பாங்க. அவர் முந்திரிக்கொட்டைகளை வீசியெறிந்து எதிராளி சுட்டிக்காட்டும் முந்திரிக்கொட்டையைக் குறிபார்த்து அடிக்கணும். சரியா குறிபார்த்து அடிச்சா அத்தனை கொட்டைகளும் அடிச்சவருக்குச் சொந்தம் மறுபடிம் எல்லாரும் ஒவ்வொரு முந்திரிக்கொட்டையை விளையாதுபவருக்குக் கொடுக்கணும் இதுதான் அந்த விளையாட்டு. விளையாதுபவரகளை பொறுத்தவரைக்கும் அது வெரும் முந்திரிக்கொட்டைகள் அல்ல. அதுதான் அவங்களோட பணம்.

 

இனியன் விளையாடினான். எதிராளி சொன்ன முந்திரிக்கொட்டையைக் குறிபார்த்து அடித்தான் ஆகா சரியா பட்டது. அடுத்த முறையும் குறிபார்த்து அடித்தான். அதுவும் குறி தவறவில்லை. எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறை சரியா அடிக்கிறவன். அன்றைக்குத் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தான். அவனோட இரண்டு கால்சராய் ஜேபுக்குள்ளோயும் முந்திரிக்கொட்டை நிறைந்து இருந்தது. சட்டைப் பையிலும் முந்திரிக்கொட்டைகள் நிறைந்து இருந்தது. அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் நேர மோகனாகிட்ட போனான்

 

"மோகனா, வா உனக்கு இன்றைக்குக் கேக் வாங்கித் தர்றேன்'' என்று

 

அவளையும் கூட்டிகிட்டு கேக் கடைக்குப் போனான்.

 

ஒரு கேக்கைக் காட்டி "இந்தக் கேக்கைக் காகிதப்பெட்டியில் அலுங்காம கட்டித்தாங்க'' அப்படீண்ணான். கடைக்காரர் அவனை ஒரு மாதிரிப் பார்த்து "'பணம் வச்சிருக்கியா?'' அப்படீண்ணு கேட்டாரு.

 

"பணமில்லாமல் யாராவது கேக் வாங்க வருவாங்களாண்ணு" மறு கேள்வி கேட்டான் மோகன். கடைக்காரரும் கேக்கைப் பெட்டியில் வைத்து கட்டிக்கொடுத்துட்டு பணம் வாங்கிறதுக்காக கல்லாப்பெட்டிக்கிட்ட போனாரு. மோகனும் கல்லாப் பெட்டிக்கிட்டே போய் ''எத்தனை ரூபாய் என்று கேட்டான்" நூற்றிருபது ரூபாய் என்று சொன்னார் கடைக்காரர்.

 

மோகன் இரண்டு கால்சராய் பாக்கட்டிலெயும் கையை விட்டு முந்திரிக்கொட்டைகளை வாரி வாரி மேசை மேல் வைத்தான். சட்டைப் பையிலுள்ள முந்திரிக்கொட்டைகளையும் வாரி மேசை மேல் வைத்துவிட்டு "இது போதுமாண்ணு'' கேட்டான்.

 

கடைக்காரர் ஒருநிமிடம் ஆடிப்போயிட்டாரு. மோகன் முந்திரிக்கொட்டைகளை வாரி வாரி மேசை மேல் வவைத்ததையும். அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெரிய மனுஷத் தோரணையில் கேக் எப்படிப் புடிக்கணும்ணு தங்கச்சிகிட்ட சொல்லுவதையும் பார்த்த கடைக்காரர் ஒரு நிமிடம் யோசிச்சாரு. அவரோட மனசில பல காட்சிகள் மின்னி மறையறதை அவரோட முகம் சுருங்கி விரியறதிருந்து தெரிஞ்சிக்கலாம்.

 

அவர் மோகன்னைப் பார்த்து" இதில் பணம் கொஞ்சம் அதிகமா இருக்கு. இந்தா மீதி'' என்று ஒரு ருபாய் நோட்டையும் கொடுத்தாரு. அதை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்து கொண்டு தங்கச்சியையும் கூட்டிகிட்டு வீட்டுக்குப் போனான்.

 

சாயங்காலம் அப்பா வந்தாரு. நடந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டாரு. அஞ்சு ரூபாய்க்குக் கூட தேறாத கொஞ்சம் முந்திரிக்கொட்டைகளுக்காக 120 ரூபாய் மதிப்புள்ள கேக்கை கடைக்காரர் ஏன் கொடுத்தாரு" மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டு சட்டைய மாட்டிகிட்டு கடைக்குப் புறப்பட்டார். கையில் 120 ரூபாய் எடுக்க அவர் மறக்கவில்லை.

 

கடைக்குப் போனார். முந்திரிக்கொட்டைகளை வாங்கிகிட்டு ஏன் கேக் கொடுத்தீங்கண்ணு கேட்டாரு"

 

"உங்க பையன் முந்திரிக்கொட்டைகளை வாரி வாரி மேசை மீது போட்டபோது நான் சின்னப் பையனா இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. வீட்டுக்குப் போற வழியில் அலங்கார மீன் விக்கிற கடை ஒன்று இருக்கு. அதில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே வண்ண வண்ண மீனுகள் நீந்திகிட்டிருக்கும். அதை பார்த்து நிற்பேன். ஒரு நாள் எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. அந்தக் காலத்தில் உடைந்த பானைத்துண்டுதான் எங்க பணம். அதையும் எடுத்துக்கிட்டு மீன் வாங்க போனேன். அதைக்கொடுத்ததும் கடைக்கார் சிரிச்ச முகத்தோட எனக்கொரு மீன் தந்தாரு.

 

அவரோட சிரிச்ச முகம் என் கண்ணில் இப்பவும் நிற்குது. அப்படீண்ணு சொல்லிட்டு கடைக்காரர் உடல் குலுங்கச் சிரித்தாரு.

 

பருத்த உடம்புக்காரரும் , மீசைக்காரருமான இந்த முரட்டு உருவத்துக்குள்ளே இப்படி ஒரு குழந்தை மனசு ஒளிஞ்சிருக்குதா அப்படீண்ணு ஆச்சரியப்பட்டாரு மோகனோட அப்பா.

 

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.