|
||||||||||||||||||
இறைவன் தந்த வரம் |
||||||||||||||||||
![]() வாசுகிக்குக் கதை என்றால் மிகவும் பிடிக்கும். திறந்த வாயை மூடாமல் கதை கேட்பாள். அம்மா மடியில் படுத்து கொண்டு கதை கேட்டுக்கிடே தூங்கறதுண்ணா அவ்வளவு பிடிக்கும். அம்மா இல்லை என்றால் பாட்டியிடம் கதை கேட்பாள்... ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கதை கேட்க்கவில்லை என்றால் வாசுகிக்குத் தூக்கமே வராது.
கதையில் வருபவர்களை போல் தன்னையும் கற்பனைப் பண்ணிப் பார்த்து கொள்வாள்.
அம்மாவும், பாட்டியும் சொலும் கதையில் வருபவர்கள் எல்லாம் எதுக்கோ ஒன்றுக்கு ஆசைப்படுவாங்க. அது கிடைப்பதற்காக தவம் செய்வாங்க. கடவுள் அவங்க முன்னாடி வந்து "பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள்" என்று சொல்லவாரு, அவங்களும் வரம் கேட்பாங்க. கடவுள் வரம் கொடுப்பாரு. அவங்க ஆசைப்பட்டது அவங்களுக்கு கிடைக்கும். அவங்க மகிழ்ச்சியாக இருப்பாங்க...
"ஐ.. நாமளும் அப்படி கடவுளிடம் கேட்டால் கடவுள் கொடுக்கவா மாட்டார்.. தவம் செய்து தான் பார்ப்போமே" என்று அவளோட மனதில் ஆசை முளைத்தது.
அடுத்தநாள் அவளும் தவம் செய்யத் தொடங்கினால். கடவுள் நினைத்தாள், கடவுளை மட்டும் நினைத்தாள்.. நினைத்து கொண்டே இருந்தாள். தூங்காமள், உண்ணாமல் நினைத்து கொண்டே இருந்தாள்...
உடம்பு இளைத்தது. கைகாலெல்லாம் வலித்தது. இருந்தாலும் விடாமல் கடவுளயே நினைத்தாள்... நாட்கள் நீண்டது வாசுகி தவம் செய்கிற செய்தி கடவுளுக்கு எட்டியது. கடவுள் இறங்கி வந்தார்.
வாசுகி முன்னால் வந்து நின்னார். " உன் தவத்தை யாம் மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' அவர் மாட்டிக்கப் போற விஷயம் அவருக்கே தெரியாமல் கேட்டார்.
வாசுகி கடவுளை பாத்தாள். ஆகா இதுதான் அருமையான வாய்ப்பு. இதை கெட்டியாக பிடித்து. எல்லாவற்றையும் கேட்கணும் என்று மனசில்நினைத்து கொண்டு.. நான் என் ஆசையைச் சொல்கிறேன் கேளுங்க. என்று கடகட என்று சொல்ல ஆரம்பித்தாள்..
ஆழ்கடலுக்குள்ள போக வேண்டும் அண்டவெளியைச்சுற்றி வர வேண்டும் கடந்த காலத்துக்கு போக வேண்டும் எதிர்காலத்துக்கும் போக வேண்டும் இறந்தவங்க கிட்டே பேச வேண்டும் பிறக்கிறவங்கிட்டேயும் பேச வேண்டும் மரத்துக்குள்ளே போக வேண்டும் மனுஷங்களுக்குள்ளேயும் போக வேண்டும்
ஆனா எல்லாத்துக்கும் ஒவ்வொரு கருவியாத் தந்திராதீங்க. எல்லாம் செய்கிற ஒரே ஓரு கருவியைத் தாங்க" என்றாள்...
வாசுகியோட ஆசையைக் கேட்டுக் கடவுளுக்கே தலை சுத்தியிருக்கும். "பக்தயே, உன் ஆசை பேராசை. ஆனாலும் நீ தவம் செய்தவளாயிற்றே. ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியாதே... இரண்டு நாள் பொறுத்துக்கொள். நான் யோசிக்க வேண்டும்'' என்று சொல்லி மறைந்து போனார்.
போனவர் யோசிச்சாரு.. யோசிச்சாரு.. ரூம்போட்டு யோசிச்சாரு. இரண்டு நாளுக்கு அப்புறம் வந்தாரு.
"வாசுகி கையை நீட்டு. கண்ணை மூடிக்கொள். உன் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் அற்புதக் கருவியைக் கண்டுபிடித்து வந்துள்ளேன். அதை உனக்குத் தருகிறேன். அந்தக் கருவியை நன்கு பயன்படுத்தினால் நீ என்னவிடவும் பெரியவளாகி விடுவாய்'' என்றார்.
வாசுகி கண்ணை மூடினாள், கையை நீட்டினாள்...
கடவுள் அவள் கையில் அந்த அற்புதமான கருவியை வைத்தார். மாயமாய் மறைந்தார்.
வாசுகி கண்ணத் திறந்து பாத்தாள்...
அண்ட வெளியில் பறக்க வைக்கிற, ஆழ்கடலுக்குள்ள போக வைக்கிற. இறந்தவங்க கிட்ட பேச உதவுற, எதிர்காலத்தை இப்பவே பார்க்கிற அந்த அற்புதமான கருவி எது தெரியுமா?
அதுதான் புத்தகம். வாசுகி புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள். நல்ல வாசகி ஆனாள். |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|