ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஒபாமாவின் மனைவி மிஷெல்லின் உடையை வரைகலை மூலம் (கிராபிக்ஸ்) மாற்றி ஈரான் தொலைகாட்சிகள் ஒளிபரப்பு செய்தன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபமாவின் மனைவி அர்கோ என்ற திரை படத்திற்கு ஆஸ்கார் விருதை வழங்கினார்.அப்போது அவர் கை இல்லாத ஆடையை அணிந்திருந்தார். ஆஸ்கார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகளை ஈரான் தொலைகாட்சிகளும் ஒளிபரப்ப்பு செய்தன. இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்கள் கவர்ச்சி ஆடை அணிய அனுமதியில்லை. இதே போன்று தொலைகாட்சிகளிலும் கவர்ச்சி ஆடை அணியும் பெண்களை பார்க்க முடியாது. எனவே ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மிஷெல் அணிந்து வந்த கவர்ச்சி ஆடையை, ஈரான் தொலைகாட்சிகள் வரைகலை மூலம்(கிராபிக்ஸ்) கவர்ச்சி இல்லாத ஆடையாக மாற்றி ஒளிபரப்பின.
|