LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

கத்தியை தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்கள்Į

     சிவா ஒரு நல்ல உழைப்பாளி, மரம் வெட்டும் தொழிலை கற்று அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தான். அந்த ஊர் மரப்பட்டறை வைத்திருக்கும் வேலுவிடம் வேலைக்கு சேர்ந்தான்.வெட்டுவதற்காகவே வளர்க்கப்பட்ட தனது சவுக்குத் தோப்பில சிவாவை மரம் வெட்ட வேலைக்கு அனுப்பி வைத்தார் வேலு.அங்கு மிக கடுமையாக உழைத்து தன் முழுத் திறமையையும் காட்டி மரம் வெட்டலானான். முதல் நாள் 50 மரங்களை வெட்டினான், இரண்டாவது நாள் 45 மரங்களை வெட்டினான், மூன்றாம் நாள் மிக கடுமையாக உழைத்தும் 30 மரங்களே வெட்ட முடிந்தது.


     ஒரு நாள் மாலையி*ல் 25 மரங்களை மட்டுமே வெட்டிய சிவா, மிகவும் களைத்துப் போய் தன் மரம் வெட்டும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தன் முதலாளியிடம் தெரிவித்தான். அவரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, சிவா உன்னுடைய திறமை, உழைப்பின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த தொய்வு உன்னால் ஏற்பட்டது அல்ல என்று கூறினார். கடைசியாக உன் கோடாலியை எப்போது சாணம் (கூர் தீட்டினாய்) பிடித்தாய் என்று கேட்டார். அதற்கு சிவாவோ, ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும் என்று சொன்னான். முதலாவதாக உன் கோடாலியை தீட்டு பின் மரம் வெட்டப் போ என்று கூறினார். சிவா உற்சாகமாக தனது கோடாலியை கூர்மையாக்கி, அன்று நிறைய மரங்களை வெட்டி தன் முழு உழைப்பையும் காட்டினான். அவன் புத்திசாலித்தனமின்றி செயல்ப*ட்டதால் ஏற்பட்ட தொய்வுதா*ன் இது.இதனால் குழந்தைகளே உங்களுக்கு என்ன புரி*கிறது, கத்தியைத் தீட்டாமல், புத்தியைத் தீட்ட வேண்டும்.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தந்தையை திருத்தும் மகன் தந்தையை திருத்தும் மகன்
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.