ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டுதை 12 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னாள் பிரதமர் கெவின் ருத் தோற்கடித்து தலைவர் பதவியை கைபற்றியுள்ளார். இதனை அடுத்து பிரதமர் பதவியை, ஜூலியா ராஜினாமா செய்ய போவதாகவும், அதற்கு பதில் கெவின் ருத் அந்த பதவியை ஏற்பார் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|