|
|||||
குட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா |
|||||
பட்டு பாவாடை சொக்காய் போட்டு தலையை அழுத்தி வாரிவிட்டு இரட்டை சடைகள் போட்டு விட்டு கண்ணுக்கு அழகாய் மை போட்டு முகத்தில் பவுடர் பூசி விட்டு கன்னத்தில் கொஞ்சம் திருஷ்டி இட்டு குழந்தையின் முகத்தை கைகளால் சுற்றி விட்டு ஊரு கண்ணு, உலக கண்ணு எல்லாம் போகனும்னு ! சொடக்கு போட்டது அந்த காலம். அண்டை அயலார் நண்பர்களுக்கு பூஜை செய்த பொங்கலை வைத்து தட்டு நிறைய மிட்டாய் வைத்து சென்று கொடுத்தது அந்த காலம் உற்றார், சுற்றார் அனைவருமே இல்லம் வந்து உங்களை வாழ்த்தி சென்றது அந்த காலம் எத்தனை காலங்கள் ஆனாலும் உங்கள் பிறந்த நாள் வரும்போது பெற்றோர் எல்லோர் மனங்களிலும் என்றும் மகிழ்ச்சி ஏற்படுமே ! |
|||||
My period of your birth day | |||||
by Dhamotharan.S on 01 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|