|
||||||||||||||||||
பேசும்போது பார்த்து பேசுங்க. |
||||||||||||||||||
சோனியா எப்போதும் எதாவது செஞ்சிட்டேயிருப்பா. அவள் சும்மா இருந்து யாரும் பார்த்ததேயில்லை. அவள் கையிலே எதாவது பொருள் இருந்திட்டே இருக்கும்.
அதை வைத்து எதாவது ஒரு பொருள் செய்வாள். அல்லது அறிவியல் பரிசோதனைகள் செய்வாள்.
ஒருநாள் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குப்பியை எடுத்து வந்தாள். ஒரு கம்பியை எடுத்தாள். அதன் நுனியை நல்ல சூடாக்கி பிளாஸ்டிக் குப்பியின் அடியில் பத்துப் பதினைத்து துவாரங்கள் இட்டாள். ஒரு வாளியில் தண்ணீர் எடுத்தாள். வீட்டில் உள்ளவரை எல்லாரையும் கூப்பிட்டாள்.
"ஒ இவ இன்னைக்கு புதுசா ஏதோ கண்டுபுடித்து விட்டாள்'' என்று அவங்களுக்கு தெரிஞ்சு போனது. என்ன சோனியா இன்றைக்கு என்ன மந்திரம் பண்ணப்போறே...'' அப்படீண்ணு கேட்டுக்கிட்டே சோனியாகிட்டா வந்தாங்க. "நான் நினைச்சா மழை பெய்யும். பார்க்கறீங்களாண்ணு கேட்டுகிட்டு அந்தப் பிளாஸ்டிக் குப்பியை வாளியில் மூழ்கச் செய்து ஒரு கப்பால் அதில் நிறைய தண்ணீர் ஏற்றினா. பிறகு அந்தக் குப்பிடைய மூடினாள். அந்த குப்பியை வெளியே எடுத்து " ஒ மழைக்கடவுளே. இப்ப மழைபெய்யணும்'' அப்படீண்ணு சொல்லீட்டே குப்பியோட மூடியைத் திறந்தாள். அதிலிருந்து தண்ணீர் மழைபோல கொட்டியது.
"நீ மூடியைத் திறந்த. அதனால் காற்று உள்ளே போனது. தண்ணீரை தள்ளிச்சு. அதனாலேதான் தண்ணீர் மழைபோலக் கொட்டியது'' அப்படீண்ணு அவளோட தம்பி சோனு சொன்னான்.
அதுக்கு சோனியா "இப்படி நீ சொல்லுவேண்ணு எனக்குத் தெரியும். இப்போபாரு'' என்று குப்பியை மூடினா. "ஒ... மழைக்கடவுளே இப்பே மழை பெய்யணும்'' என்று சொன்னாள். குப்பியிலிருந்து தண்ணீர் கொட்டியது. தம்பியும் மீதியுள்ளவங்களும் ஆச்சரியத்தால் வாயைப் பொளந்து பார்த்திட்டே இருந்தாங்க.
அவ கும்பியை மெல்ல அழுத்தியதை யாரும் பார்க்க வில்லையே. இதுதான் சோனியா. இதுக்கு சோனியா நாலாம் வகுப்பில் தான் படிக்கிறாள். ஒரு நாள் அவள் ஒரு மெழுகு திரியை வைத்து ஏதோ பரிசோதனை செய்திட்டிருந்தாள்.
அப்ப அவங்க அப்பாவைப் பார்க்க ஒரு பேராசிரியர் வந்தாரு. அவர் கல்லூரியில் அறிவியல் கற்பிக்கிறவர். சோனியாவோட அப்பாகூடப் பேசிட்டிருந்தவர் சோனியா மெழுகுவர்த்தியைப் பத்தவைக்கிறதை பார்த்தார்.
அந்தப் பெரிய பேராசிரியர் சோனியா கிட்ட விளையாட வேண்டும் என்று நினைத்தாரா என்று தெரிய வில்லை. நேரா அவ கிட்ட போயி "பாப்பா என்ன பண்ணீட்டிருக்கே'' அப்படீண்ணு கேட்டாரு.
பார்த்தா தெரியலையா? மெழுகுவத்தியைப் பத்த வைச்சிட்டிருக்கேன்.
சரி பக்கத்திலே சார்ட் காகிதம் எல்லாம் கிடக்குது எதுக்கு நான் காகிதப் பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கப்போறேன்.
பேராசிரியர் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டார்.
எப்படி?
ஒரு பத்து நிமிஷம் இருங்க செய்து காட்டறேன் என்று சொன்னாள் சோனியா.
சார்ட்டு பேப்பரோட நாலு ஓரங்களையும் உள்ள பார்த்து மடக்கி ஸ்டாப்ளர் பின்னாலே ஓரங்களை இணைத்து காகிதப் பாத்திரம் செயதாள்.
எல்லோருமா வாங்க... அப்படீண்ணு கூப்பிட்டா முதலில் அந்தப் பேராசிரியர்தான் எந்திருச்சு வந்தார்.
சோனியா கீழே கிடந்த ஒரு சார்ட்டுத் துண்டைக் கையில் எடுத்தாள்?
"இப்ப இந்தக் காகிதம் எத்தனை நொடியில் தீப்பிடிக்குதுண்ணு பாருங்க''
அப்படீண்ணு சொல்லிட்டே எரியுற மெழுகுவர்த்தியிலே அதை காட்டினாள். அது ஒரு நொடியில் பற்றியது.
பிறகு காகிதப்பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாள். இப்ப இதை நான் எரியுற மெழுகுவர்த்திக்கு மேலாகப் பிடிக்கப்போறேன். ஒரு நொடியில் தீப்பிடிக்காத பாருங்க''
அப்படீண்ணு சொல்கிட்டே தண்ணீர் ஊத்தின காகிதப் பாத்திரத்தை சுடருக்கு மேலே புடிச்சி. ஆனா என்ன அதிசயம் காகிதம் தீப்பிடிக்கவில்லை. நிமிஷம் ஆனது.
இரண்டு நிமிஷம் ஆனது, ஐஞ்சு நிமிஷம் ஆனது. ஆனா காகிதம் தீப்பிடிக்கவில்லை. உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தா தண்ணீர்யைத் தொட்டுப் பாக்கலாம்ணு சோனியா சொல்ல பேராசிரியர் தொட்டுப் பார்த்தாரு. ஆமா தண்ணீர் சூடாக இருக்குண்ணு சொன்னார்.
எல்லாரும் தொட்டுத் தொட்டுப் பார்த்தாங்க. அவ தம்பி சோணு "இனிமே தண்ணி சூடாக்கப் பாத்திரம் வேண்டா காகிதம் போதும்ணு கை தட்டிச் சிரித்தான்.
அந்தப் பேராசிரியர் தனக்கும் அறிவியல் தெரியும்ணு காட்டணும் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. "'சோனியா, ஏங்க நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு பாக்கலாம்ணு சொன்னார். சோனியாவோ கேளுங்க, எனக்குப் பதில் தெரிஞ்சா சொல்றேன்ணு சொன்னாள்.
இந்த மெழுகு வர்த்தியில் இருக்கிற சுடர் எங்கிருந்து வந்தது. அப்படீண்ணு கேட்டார்.
இது எல்லாருக்கும் தெரியுமே. தீப்பெட்டியிருந்து வந்தது.
தீப்பெட்டிக் குச்சிக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டார். சோனியா யோசிக்கறதைப் பார்த்த அவருரோட முகத்தில் மெல்லிசா ஒரு புன்சிரிப்பு வந்தது சோனியாவை மடக்கிவிட்டோம் என்று நினைத்தார் போல.
சோனியாவுக்கு என்ன பதில் சொல்லுறதுண்ணு தெரியவில்லை. அவள் ஒரு நிமிஷம் யோசிச்சாள்.
ப்பூண்ணு மெழுகுவத்தியோட சுடரை ஊதி அனைத்தாள். அப்புறம் அந்தப் பேராசியரைப் பார்த்து "இப்ப அந்தச் சுடர் எங்கே போனது சொல்லுங்க. அது எங்கிருந்து வந்ததுன்னு நான் சொல்றேன். என்றாள்.
அவ்வளவுதான் எல்லோரும் சிரிச்சாங்க . பேராசிரியருக்கு என்ன சொல்லறதுண்ணு தெரியவில்லை. அவர் நைசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு "சுட்டிப் பொண்ணு'' அப்படீண்ணு தட்டிக்குடுத்தார்.
ஆனா அவள் மனசில் இனிமே குழந்தைககிட்ட பேசும்போது பார்த்துப்பேசணும் என்று நினைத்தார்.. |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|