LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு திருச்சியில் நடைபெறும் ஆட்சேர்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர்,திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும். இதன் விவரங்கள் பின்வருமாறு,

ஆட்சேர்ப்பு நடைபெறும் நாள் : ஆகஸ்ட் 2 முதல் 10 வரை
இடம் : அன்னை சந்தியா மாவட்ட விளையாட்டு அரங்கம், தஞ்சாவூர்
கல்வித்தகுதி :
1.Soldier (Technical) : +2 வில் கணித  பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2.Soldier (Ammunition/Aviation) : கணித பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical/Electrical/Automobile/Computer Science/Electronics/Instrumentation பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3.Soldier (Nursing Assistant) : +2வில்  கணிதம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Botany/Zoology/Bio Science பாடத்தில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4.Soldier (General Duty): 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5.Soldier (Tradesman): Housekeeper / Mess Keeper Canteen பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Chef, Washer man, Dresser, Steward, Tailor, Artisan (Wood Work, Construction/Metallurgy), போன்ற பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6.Soldier (Clerk/Store Keeper Technical) : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.10.2017 தேதியின் படி குறைந்தது 17 1/2 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 23 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். Soldier General Duty பணிக்கு மட்டும் 17 1/2 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 23,000 மற்றும் இதர  சலுகைகள் வழங்கப்படும்.
உடற்தகுதி : குறைந்தபட்சம் 165 செ.மீ ,உயரம், 50 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். மார்பளவு 77 செ.மீ. இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
Soldier (General Duty) பணிக்கு மட்டும் குறைந்த பட்ச உயரம் 166 செ.மீ இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி :
1. 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஐந்து நிமிடம் 45 வினாடிக்குள் ஓடி கடக்க வேண்டும்.
2. 9 அடி நீளம் தாண்டுதல் மற்றும் 6 முறை Pull Ups எடுத்தல், Balancing Beam செய்தல் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.

மேலும் ராணுவ மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும். மேற்கண்ட அனைத்து தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம், முகவரி போன்ற விபரங்கள் தங்களுடடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கபடும்.

நேரடி ஆர்சேர்ப்பின் போது கீழ்வரும் சான்றுகளின் அசல் மற்றும் கெஜட் அதிகாரியிடம் கையொப்பம் மற்றும் முத்திரை பெற்ற ஒரு ஜோடி நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்  விபரம் பின்வருமாறு,
1. 10/+2/பட்டப்படிப்பு சான்றிதழ் (TC) மற்றும் மதிப்பெண் பட்டியல்
2. இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, நன்னடத்தை சான்று.
3. NCC/Sports சான்றிதழ் (வைத்திருப்பவர்கள் மட்டும்)
4. சமீபத்தில் எடுக்கபப்ட்ட கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 12. புகைப்படத்தின் கீழ் தங்களது பெயர், பிறந்த தேதி குறிக்கப்பட்டிருக்க வேண்டும். லைட் கலர் பின்னணியில் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரரின் கூடுதல் கல்வித்தகுதி / தொழிற் கல்வித்தகுதி சான்றுகள் இருப்பின்  கொண்டு வரவும். சான்றிதழ்கள் விபரங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். நேரடி ஆர்சேர்ப்பில் கலந்து கொள்வதற்கான அட்மிட் கார்டை ஜூலை 17-ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

by Swathi   on 03 Jul 2017  1 Comments
Tags: government velai vaippu   government velai vaippu mugam   ranuvam jobs   Army Jobs   indian army job after 10th   job in indian army after 12th   join indian military  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !! பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !!
கருத்துகள்
20-Jun-2018 05:36:15 Vetri karthikeyan said : Report Abuse
Indian army
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.