LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

நடையில் தொடங்கி நடையில் முடியும்

 

கத்திரிக்கா, வெண்டக்கா, தக்காளி, பச்ச மொளகா..., கத்திரிக்கா, வெண்டக்கா, தக்காளி பச்ச மொளகா,
வேலுச்சாமி அடித்தொண்டலெ கத்தினான். அவனோட தலயிருந்த கூடையிருந்த காய்கறிக எங்கள வாங்க வர்றது யாருண்ணு பாக்கறதுக்கு முயற்சி பண்றமாதிரி வெளியே நீட்டிகிட்டு இருந்திச்சு. 
அவனோட தலையிருந்து வேர்வை ஒழுகி அவனோட ஒடம்ப நனச்சுது. சட்டை வேர்வையில நனைஞ்சு ஒடம்போட ஒட்டி இருந்துச்சு. 
காய்கறிக் கூடையைத்தலையிலெ சொமந்துட்டுத் தெருத் தெருவா அலய முடியாதப்ப... தலை என்னமா வலிக்குது.  எப்படியாவது ஒரு உந்து வண்டியை வாங்கிறணும்'' வேலுச்சாமி நெனச்சான்.
அவன் பணம் சேர்க்கத் தொடங்கினான். போஸ்டாபீஸ்லெ கணக்குத் தொடங்கி சேமிக்கத் தொடங்கினான். ஆச்சு ஒரு வருஷமாச்சு. நாலு சக்கரங்களெலயும் புது டயர் போட்ட, பளபளண்ணு மின்னுற ஒரு உந்து வண்டியை வாங்கிட்டான் வேலுச்சாமி.
கூடையிலெ பத்துகிலோ காய்கறி மட்டும்தான் செமந்து வித்திட்டிருந்தான். இப்போ உந்து வண்டி வந்ததும் இருப்பத்தஞ்சு கிலோவுக்கும் அதிகமான காய்கறிகளெ உந்துவண்டியில வச்சாலும் அவனுக்கு சுகமாக இருந்துச்சு. வேகம் வேகமா வண்டி நகர்றதுண்ணாலே அதிக தெருக்களுக்குப் போகவும் முடிஞ்சது.
ஆச்சு, ஆஞ்சாறு மாசங்களாச்சு. "உந்து வண்டியை உந்தி உந்தி தோளெல்லாம் வலிக்குது'' எப்படியாவது ஒரு மொபட் வாங்கணும்ணு'' நெனச்சான். சேமிப்புக் கணக்கிலே பணம் போட்டான். ஆறே மாசத்திலே ஒரு மொபட் வாங்கினான். 
மொபட்டோட பின்னாலே ஒரு கூடை முன்னாலே ஒரு கூட வச்சுகிட்டு நிறைய வீடுகளுக்குப் போனான். ஆச்சு, ஆறேழு மாசமாச்சு. அவனுக்கு மொபட் ரொம்ப குலுங்குது. மட்டுமல்ல. நிறைய வீடுகளுக்கு வேகமாப் போறதாலே மொபட்டல கொண்டு போற காய்கறி பாத்தாதுண்ணும் அவனுக்குத் தோணிச்சு ஒரு பெட்டி ஆட்டோ வாங்கினா நல்லா இருக்கும்ணு நெனச்சான். பணம் சேர்த்தான். பெட்டி ஆட்டோ வாங்கினான். அதுக்கப்புறம் ஒரு டோம்போ வாங்கினான். மொத்தமா காய்கறிகளை வாங்கி நான்கு சாலைகள் சேர்ற எடத்திலெ நிறுத்தி வியாபாரம் செய்தான். நல்ல லாபம் வந்திச்சு. கையிலெ நெறைய பணம் சேந்திச்சு. 
பணம் சேந்ததும் நாமளே ஏன் ஒட்டணும் ஒரு ஒட்டுநரை வக்கலாம்ணு நெனச்சு ஒட்டுனரை வேலைக்கு வச்சான். இப்போ வேலுச்சாமி வேலையில்ல ஆனா பணம் வந்திச்சு. நல்லா சாப்பிடத் தொடங்கினான். நல்லாத் தூங்கினான். அதனாலெ என்னாச்சு? ரெண்டே வருஷத்திலே உடம்பு பருத்துப் போச்சு. ஒல்லியாய் முருங்கைக்காய் போல, இறுகின ஒடம்போட இருந்த வேலுச்சாமி இப்போ குண்டுப் பூசனிக்காய் மாதிரியாகிட்டான்.
தூங்கி எந்திரிச்சா உடம்பெல்லாம் வலிக்குது. ரெண்டு எட்டு வச்சா மூச்சு முட்டுது. உட்காந்தா எந்திருக்க முடியலெ. எந்திரிச்சா உட்கார முடியலெ. அவன் யோசிச்சான். ஒரு நல்ல மருத்துவர்கிட்டேப் போனான். அவரும் நீ என்ன வேலை செய்யறே, காலையிலெ என்ன செய்யறே... மாலையிலெ என்ன செய்யறே.. என்ன சாப்பிடறே அப்படீண்ணு ஒவ்வொண்ணைப் பத்தியும் கேட்டாரு. அப்புறம் மருந்து சொன்னாரு. ஆமா மருந்து குடுக்கல. மருந்து சொன்னாரு. நாளும் காலையிலும் சாயங்காலமும் மூணு கிலோ மீட்டர் வேகமா நடக்கச் சொன்னாரு. காலையில பழங்கள் மட்டும் சாப்பிடச் சொன்னாரு அப்படி வேலுச்சாமி இப்போ காலையிலும் மாலையிலும் அவன் வீட்டுக்குப் பக்கத்திலெ உள்ள பள்ளிக்கூட மைதானத்தைச் சுத்தத் தொடங்கினான். ஆறுமுற சுத்தி வந்தா மூணு கிலோ மீட்டராயிரும். சில நாட்களிலெ சாலையோரமா நடப்பான்.
நீங்க எப்பாவவாது காலையிலே சாலையிலே போயிருக்கீங்களா? அப்பா குண்டா யாராவது நடக்கிறது பாத்திருக்கீங்களா. நல்ல கைகளை அகலமா வீசி, கால்களை நீட்டி நீட்டி வச்சு நடக்கறதா பாத்தீங்கண்ணா அவரு நம்ம வேலுச்சாமியா இருக்கலாம்.
பாவம் வேலுச்சாமி ஒழுங்கா கூடையைத் தலையில சொமந்து தெருத்தெருவா நடந்த வியாபாரம் பண்ணினப்போ அவனுக்கு ஏந்த நோயும் இல்ல நொடியும் இல்ல. 
இப்ப பாருங்க மருத்துவர் சொல்லி மறுபடியும் நடக்கத் தொடங்கியிருக்கான்.
நடையிலே தொடங்கி நடையிலெ முடியுது நம்ம வேலுச்சாமியோட வாழ்க்கை.

 

கத்திரிக்காய், வெண்டக்காய், தக்காளி, பச்சை மிளகாய்..., கத்திரிக்காய், வெண்டக்காய், தக்காளி, பச்சை மிளகாய்,

 

வேலுச்சாமி அடித்தொண்டையில் கத்தினான். அவனோட தலையிலிருந்த கூடையில் காய்கறிகள் எங்களை வாங்க வருவது யாருண்ணு பார்க்கிறதுக்கு முயற்சி செய்வது மாதிரி வெளியே நீட்டிகிட்டு இருந்தது.

 

அவனோட தலையிலிருந்து வேர்வை ஒழுகி அவனோட உடம்ப நனைத்தது. சட்டை வேர்வையில் நனைந்து உடம்போட ஒட்டி இருந்தது.

 

காய்கறிக் கூடையைத்தலையில் சுமந்து கொண்டு தெருத் தெருவா அலைய முடியாதப்ப... தலை என்னமா வலிக்குது.  எப்படியாவது ஒரு உந்து வண்டியை வாங்க வேண்டும்'' என்று வேலுச்சாமி நினைத்தான்.

 

அவன் பணம் சேர்க்கத் தொடங்கினான். போஸ்டாபீஸ்ல் கணக்குத் தொடங்கி சேமிக்கத் தொடங்கினான். ஒரு வருடமானது. நாலு சக்கரங்களையும் புது டயர் போட்ட, பளபளண்ணு மின்னுற ஒரு உந்து வண்டியை வாங்கிட்டான் வேலுச்சாமி.

 

கூடையில் பத்துகிலோ காய்கறி மட்டும்தான் சுமந்து விற்று கொண்டிருந்தான். இப்போ உந்து வண்டி வந்ததும் இருப்பத்தந்து கிலோவுக்கும் அதிகமான காய்கறிகளை உந்துவண்டியில் வைத்தாலும் அவனுக்கு சுகமாக இருந்தது. வேகம் வேகமா வண்டி நகர்வதால் அதிக தெருக்களுக்குப் போகவும் முடிந்தது.

 

ஐந்தாறு  மாதங்கள் ஆனது. "உந்து வண்டியை உந்தி உந்தி தோளெல்லாம் வலிக்குது'' எப்படியாவது ஒரு மொபட் வாங்க வேண்டும் என்று நினைத்தான். சேமிப்புக் கணக்கில் பணம் போட்டான். ஆறே மாதத்தில் ஒரு மொபட் வாங்கினான்.

 

மொபட்டோட பின்னால் ஒரு கூடை, முன்னால் ஒரு கூடை வைத்து  நிறைய வீடுகளுக்குப் போனான்.  ஆறேழு மாதமானது. அவனுக்கு மொபட் ரொம்ப குலுங்குது. மட்டுமல்ல. நிறைய வீடுகளுக்கு வேகமாப் போறதால் மொபட்டல கொண்டு போற காய்கறி பாத்தாது என்று அவனுக்குத் தோணியது ஒரு பெட்டி ஆட்டோ வாங்கினா நல்லா இருக்கும் என்று நினைத்தான். பணம் சேர்த்தான். பெட்டி ஆட்டோ வாங்கினான். அதன் பிறகு ஒரு டோம்போ வாங்கினான். மொத்தமா காய்கறிகளை வாங்கி நான்கு சாலைகள் செய்கிற இடத்தில் நிறுத்தி வியாபாரம் செய்தான். நல்ல லாபம் வந்தது. கையில் நிறைய பணம் சேர்ந்தது.

 

பணம் சேர்ந்ததும் நாமளே ஏன் ஒட்டணும் ஒரு ஒட்டுநரை வைக்கலாம் என்று நினைத்து ஒட்டுநரை வேலைக்கு வைத்தான். இப்போ வேலுச்சாமிக்கு வேலையில்லை ஆனா பணம் வந்தது . நல்லா சாப்பிடத் தொடங்கினான். நல்லாத் தூங்கினான். அதனால் என்னாச்சு?இரண்டே வருடத்தில் உடம்பு பருத்துப் போனது. ஒல்லியாய் முருங்கைக்காய் போல, இறுகின உடம்போட இருந்த வேலுச்சாமி இப்போ குண்டுப் பூசனிக்காய் மாதிரியாகி விட்டான்.

 

தூங்கி எந்திரிச்சால் உடம்பெல்லாம் வலிக்குது. இரண்டு எட்டு வச்சா மூச்சு முட்டுது. உட்கார்ந்தா எந்திருக்க முடிய வில்லை. எந்திரிச்சா உட்கார முடிய வில்லை. அவன் யோசித்தான். ஒரு நல்ல மருத்துவர்கிட்டேப் போனான். அவரும் நீ என்ன வேலை செய்கிற, காலையில் என்ன செய்யுற... மாலையில் என்ன செய்யுற.. என்ன சாப்பிடுர அப்படீண்ணு ஒவ்வொண்ணைப் பற்றியும் கேட்டார். அப்புறம் மருந்து சொன்னார். ஆமா மருந்து கொடுக்க வில்லை. மருந்து சொன்னார். நாளும் காலையிலும், சாயங்காலமும் மூணு கிலோ மீட்டர் வேகமா நடக்கச் சொன்னார். காலையில் பழங்கள் மட்டும் சாப்பிடச் சொன்னார் அப்படி வேலுச்சாமி இப்போ காலையிலும் மாலையிலும் அவன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தைச் சுற்ற தொடங்கினான். ஆறு முறை சுற்றி வந்தா மூணு கிலோ மீட்டராயிரும். சில நாட்களில் சாலையோரமாக நடப்பான்.

 

நீங்க எப்பாவவாது காலையில் சாலை ஓரமாக போயிருக்கீங்களா? அப்பா குண்டா யாராவது நடக்கிறது பாத்திருக்கீங்களா. நல்ல கைகளை அகலமா வீசி, கால்களை நீட்டி நீட்டி வைத்து நடக்கிறதை பார்த்தீங்கண்ணா அவரு நம்ம வேலுச்சாமியா இருக்கலாம்.

 

பாவம் வேலுச்சாமி ஒழுங்கா கூடையைத் தலையில் சுமந்து தெருத்தெருவா நடந்த வியாபாரம் பண்ணினப்போ அவனுக்கு எந்த நோயும் இல்லை நொடியும் இல்லை.

 

இப்ப பாருங்க மருத்துவர் சொல்லி மறுபடியும் நடக்கத் தொடங்கியிருக்கான்.

 

நடையில் தொடங்கி நடையில் முடியுது நம்ம வேலுச்சாமியோட வாழ்க்கை.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.