|
||||||||||||||||||
நாணயஸ்தன் |
||||||||||||||||||
முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராக சென்று பழைய பழைய ஈயம் பித்தளை பொருட்களை வாங்கி வந்து நகரத்தில் இருக்கும் மொத்த கடைகளில் போட்டு பணம் பெற்றுக்கொள்வான். அவன் செல்லும் இடங்கள் அனைத்தும் கிராமங்களாக இருந்ததால் அதிகமாக பொருட்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் அவன் வாழ்க்கையும் வறுமையில்தான் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு முறை பக்கத்து ஊர் சென்று இவன் எப்பொழுதும் பழைய சாமான்கள் சேகரிக்கும் ஒரு வீட்டில் போய் பழைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். இவன் கேட்ட வீடு ஒரு காலத்தில் நல்ல செல்வத்துடன் வாழ்ந்தவர்கள், இப்பொழுது எல்லாம் கரைந்து போய் விட்ட்து. அவர்கள் வீட்டில் இரு குழந்தைகளுடன் அதன் தாய் வறுமையில் வசிக்கிறாள். அந்த தாய் பாவம் வீட்டில் இருக்கும் தட்டு முட்டு சாமான்களை விற்று அதில் வரும் வருமானத்தில்தான் பிழைப்பு நட்த்துகிறாள்.
அதனால் பாவம் இப்பொழுது அவர்கள் வாழ வழியின்றி ஒவ்வொரு பொருளாக இவனிடம் கொடுத்து, இவன் நாணயமாய் கொடுக்கும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கையை நட்த்திக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு மனசு கஷ்டமாக இருந்தாலும் என்ன செய்வது? இவனும் அவர்கள் கொடுக்கும் ப்ழைய பொருட்களில் தான் ஜீவனம் நட்த்தியாக வேண்டுமே ?
அந்த வீட்டிற்கு ஒரு முறை போய் ஏதாவது பழைய பொருள் இருக்கிறதா? என்று கேட்டான். அந்த பெண் பரிதாபமாய் அவனை பார்த்து உன்னிடம் போடுவதற்கு இப்பொழுது ஒன்றுமே இல்லை, ஒரு காலத்தில் இவங்க தாத்தா சாப்பிட்ட பழைய சாப்பாட்டு தட்டு ஒண்ணு கிடக்கு, அதுவும் வளைஞ்சு நெளிஞ்சு கிடக்கு, அதைய நீ எடுத்துட்டு எங்களுக்கு ஏதாவது கொடுத்துட்டு போ, இரண்டு நாள் சாப்பாட்டுக்கு நிம்மதியா இருக்கலாம், வருத்தத்துடன் சொல்லியாவாறு அந்த தட்டை கொண்டு வந்து கொடுத்தாள்.
குருவாயூரப்பன் அந்த தட்டை வாங்கி பார்த்தான், மிகவும் பழையதாய், அழுக்காய் இருந்த்து அந்த தட்டு. வாங்கி அதை நன்கு துடைத்து பார்த்தான், எவ்வளவு போகும் ? சந்தேகம் வர மீண்டும் துடைத்து பார்த்தான். இவன் இப்படி அடிக்கடி துடைத்து துடைத்து பார்த்து ஏதோ யோசிப்பது போல நிற்பதை கண்ட அந்த வீட்டுப்பெண் தம்பி இந்த தட்டு உனக்கு எதுக்கும் உத்வாதுன்னாலும், எங்களுக்கு உதவி பண்னறதுக்காகவாவது ஏதாவது கொடுத்துட்டு போ ! பரிதாபமாய் சொன்னாள்.
குருவாயூரப்பன், அம்மா இப்ப என்னால் எதுவும் சொல்ல முடியாது, இப்போதைக்கு என் கிட்டே கொஞ்சம் பணம்தான் இருக்கு, இந்தாங்க என்று அவள் கையில் கொடுக்க அந்த பெண்ணுக்கு அந்த பணமே அதிகமாக தெரிய தம்பி..இதுவே அதிகம்,என்று மன்நிறைவுடன் பெற்றுக்கொண்டாள்.
குருவாயூரப்பன் எதுவும் பேசாமல் நகரத்துக்கு விரைந்தான். அங்கு அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு நகை ஆசாரியை பார்த்தான். அவரிடம் அந்த தட்டை காண்பிக்க அவர் எடுத்து பார்த்து அப்பா… இது சுத்த தங்கம்..வாயை பிளந்தார். இருவரும் அங்கிருந்த பெரிய நகை கடைக்கு சென்று இதனை காண்பித்து அந்த குடும்பத்து விவரத்தையும் சொன்னான் குருவாயூரப்பன். உடனே நகை கடைக்கார்ர் அந்த பெண்ணை கூட்டி வர சொன்னார். வாகன வசதியும் கொடுத்தார். குருவாயூரப்பன் விரைந்து சென்று அந்த பெண்னையும், அவர்கள் குழந்தைகளையும் கூட்டி வந்தான்.
கடைக்கார்ர் அந்த பெண்ணிடம் அம்மா…இந்த தட்டு மாதிரி ஏதாவது உங்க கிட்டே இருக்கா? என்று கேட்டார். இல்லைங்க ஐயா, இது எங்கேயோ கிடந்துச்சு, நான்தான் அதை பொறுக்கி எடுத்து வச்சு இவர்கிட்ட கொடுத்தேன்.
அம்மா இது சுத்த தங்கம், இதுக்கு மதிப்பு குறையாம அஞ்சு லட்சம் ரூபாய்க்கு இருக்கு. நான் உங்களுக்கு பணமா கொடுத்துடவா?
அந்த பெண் குருவாயூரப்பனை பார்த்து தம்பி, நீதான் என்ன பண்ணறதுன்னு சொல்லணும்?
குருவாயூரப்பன் ஐயா, இந்த பொண்ணு, குழந்தைங்க பேர்ல இந்த பணத்தை பேங்க்ல டிபாசிட் பண்ணி கொடுத்திடுங்க, அவங்களுக்கு அதுல இருந்து மாசாமாசம் வட்டி வரும், அதை வச்சு இவங்க வாழ்க்கையை நட்த்திக்குவாங்க..என்று சொன்னான். நகை கடைக்காரர் குருவாயூரப்பனை கட்டிக்கொண்டு உன்னைய மாதிரி நாணயஸ்தன் எங்கேயும் கிடைக்க மாட்டான், என்று சொல்லி அவர்கள் மேனேஜரை அழைத்து பக்கத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து தர சொன்னார்.
அதற்கு பின் குருவாயூரப்பனையும், அந்த ஆசாரியையும் அழைத்து தம்பி இந்தாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்த அன்பு பரிசு என்று கொஞ்சம் பணம் கொடுத்தார். குருவாயூரப்பன், அதை வாங்க மறுத்தான், இல்லை ஐயா அந்த பொருள் என்னுடையது இல்லையே? என்றவனிடம் தம்பி நான் கொடுத்தது பொருளுக்கில்லை, உன் நாணயத்துக்கு. நீ நினைச்சிருந்தா இது என்னுதுன்னு சொல்லி எங்கிட்டே பணத்தை வாங்கியிருக்க்லாம, ஆனா அந்த குடும்பத்தை கூட்டிகிட்டு வந்து அவங்களுக்கு ஒரு வருமானத்துக்கு வழியும் காண்பிச்சிருக்கியே அதுக்குத்தான்.
நன்றி கூறி அந்த தொகையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து விடை பெற்றான்.
குட்டீஸ் குருவாயூரப்பன் ஏழை வணிகனாய் இருந்தாலும் நாணயஸ்தனாய் இருந்ததால் அவனுக்கு புகழும், பெருமையும், செல்வமும் கிடைத்ததல்லவா ! |
||||||||||||||||||
Perfect man | ||||||||||||||||||
by Dhamotharan.S on 24 Jun 2019 2 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|