|
||||||||
நொடி பொழுது வேகம் |
||||||||
கழுகு ஒன்று இரையை தேடி பறந்து வந்ததாம் வழியில் ஒரு குட்டி எலி ஓட கண்டதாம் சட்டெனவே தலையை தாழ்த்தி விர்…ரென கீழே இறங்கியதாம் விர்.ரென்று சத்தம் கேட்ட குட்டி எலி திகைத்து மயங்கி நின்றதாம் ! வளையில் இருந்து சத்தம் கேட்ட அம்மா எலி எட்டி பார்த்ததாம் மயங்கி நின்ற தன் குட்டி நிலைமை புரிந்து கொண்டதாம் விருட்டெனவே வெளியே வந்து இழுத்து சென்றதாம் இறங்கி வந்த கழுகு ஏமாந்து போனதாம் அம்மா எலியின் நொடி பொழுது வேகம் உயிரை காத்ததாம் |
||||||||
by Dhamotharan.S on 02 May 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|