LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

2090 ல் ஒருநாள்

காற்று வீசும் சத்தம் கூடக் கேட்கும். ஆனால் பள பள வென மின்னும் அந்தக் கார் வந்த சத்தத்தை யாரும் கேட்ட்க்கவில்லை. தெருவோட மூலையில் ஒரு வீட்டுக்கு முன்னாடி அந்தக் கார் நின்றது. .

 

அவன் காரிலிருந்தபடியே நிமிர்ந்த பார்த்தான். காரின் மேற்பகுதி தானாக திறந்தது.. அவன் எழுந்து நின்றான். அவனுக்குச் சுமார் இருபத்தைந்து வயசு இருக்கும். அவனோட உடம்பில் சில பகுதிகளிலிருந்து சில கம்பிகள் நீட்டிக்கிட்டிருந்தது. வேறு சில பகுதிகளில் சில மின்சார வயர்கள் ஒட்டிக்கிட்டிருந்தது.. தன் கையில் கிடந்த கடிகாரத்தில் இருந்த ஒரு பொத்தானைப் பிடித்து அழுத்தினான். உடனே அவன் அணிந்திருந்த செருப்பில் சில சிவப்பு விளக்குகள் மின்னியது.

.

இரண்டு செருப்பிற்குள்ளிருந்தும் இரண்டு சின்ன காத்தாடி வெளியே வந்து வேகமாகச் சுத்தியது.. அவன் அப்படியே காத்தில் மெல்ல மிதக்கத் தொடங்கினான். மிதந்து மிதந்து மெல்ல மெல்ல வெளியே வந்து நின்றான்.

 

தன் கால்சராய்ப் பைக்குள் கையை விட்டு கைக்குட்டை மாதிரி இருந்த ஒரு பொருளை வெளியே எடுத்தான். தன் கைக்கடிகாரத்தை அதுக்கு அருகே கொண்டுபோய் வேறொரு பொத்தானை அழுத்தினான்.

கடிகாரத்திலிருந்து புறப்பட்ட அகச் சிவப்புக் கதிர்கள் அந்தக் கைக்குட்டையில் விழுந்தது. அவ்வளவுதான் கைக்குட்டை இரண்டாகப் பிளந்தது.. இரண்டு பக்கமும் திரை இருககிற சிறு கணினியாக அந்தக் கைக்குட்டை மாறியது.. "வருக வருக நானோ உலகிற்கு வருக''  அப்படீங்கற வாக்கியம் திரையில் வந்து வந்து போனது.

 

உடலெங்கும் கம்பிகளும் மின் கடத்திகளும் பொருத்தப்பட்டிருந்த அந்த இளைஞன் அந்த கைக்குட்டைக் கணினியின் பல இடங்களில் மெல்ல மெல்லத் தொட்டான்.

 

அவ்வளவுதான்... அப்பகுதியின் படம் முழுவதும் திரையில் தெரிந்தது.. திரையில் தெரிந்த வீடுகளில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தான். அதன் வாசப்படியைத் தொட்டான்.

 

வாசப்படியில் பொருத்தப் பட்டிருந்த பூட்டு பற்றி எல்லா தகவல்களும் திரையோட ஓர் ஓரத்தில் தெரிந்தது.. அதைத் தெட்டதும் வாசல் திறந்தது..

 

அப்படி ஒவ்வொரு அறையாகத் திறந்து கடைசியில் பெரிய அலமாரியில் அவன் தேடி வந்த பொருள் இருப்பதை உறுதிப்படுத்திக்கிட்டான்.

 

அந்த வீட்டை நோக்க நடந்தவன். சட்டென ஞாபகம் வந்து திரும்பிப் பார்த்தான்.

 

அவனோட காரை நோக்கிக் கையை நீட்டினான். கைக்கடிகாரத்திலிருந்து புறப்பட்ட புறஊதாக் கதிர்கள் காரின் மேல் விழுந்தது. அவ்வளவுதான் அப்படியொரு கார் அங்கே நிக்கிறதை இப்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அது மறைஞ்சு போனது.

 

வாசலுக்கு முன்னே சென்று தன் கைக்குட்டைக் கணினியில் தெரிந்த தகவல்படி சில இடத்தை தொட்டான். வீட்டுக்குள்ளே வாசலில் படுத்திருந்த யந்திரக் காவல் நாய் செத்து விழுந்தது.. அதற்கு உயிரளித்து வந்த மின்கலம் பழுதாகி கி கீ கி கீ.. என ஈன சத்தத்தில் அழுதுகிட்டிருந்தது.. அதைக் கண்ட அந்த இளைஞனின் இதழோரம் மெல்லிய புன்னகை வந்து மறைந்தது..

 

வாசற்கதவைத் திறந்து வீட்டோட நுழைவாயிலுக்கு வந்தான். கைக்குட்டைக் கணினியில் அந்த வீட்டு உரிமையாளரின் கண்கள் பெரிதாகி வந்து நின்றது..

 

அந்தக் கண்களை கதவு இடுக்கில் தெரிந்த புகைப்படக் கருவிக்கு நேராகக் காட்டினான். "விஷ்க்''  ங்ற சத்தத்தில் கதவு திறந்தது. தானாகத் திறந்துகிட்ட கதவு வழியாக அவன் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். கைக்குட்டைக் கணினி "பீப் பீப்'' என அபாயக் குரல் எழுப்பும் போது நின்றான். நாலாபக்கமும் கண்களைச் சுழல விட்டான். குறுக்கும் நெடுக்குமாக பாயும் அகச் சிவப்புக் கதிர்களை அடையாளம் கண்டுகிட்டான். அதற்கு எதிராக புற ஊதாக் கதிர்களை பாய்ச்சினான். அந்த ஒரு நிமிடத்திற்குள் அவன் அதக் கடந்து அடுத்த அறைக்குள்ள நுழைந்தான்.

 

இப்படி ஒவ்வொரு அறையாகக் கடந்து உள்ளே நுழைந்தான் .அவனுக்கு  முன்னாடி அந்த பெரிய அலமாரி தெரிந்தது..

 

சுவரோடு பொருத்தப்பட்டிருந்த அந்த அலமாரியைச் சுற்றி பெரிய பாதுகாப்பு வலையமே இருப்பதைப் புரிந்து கொண்டான். கைக்குட்டைக் கணியின் திரையில் தெரிஞ்ச பல அடையாளங்களைத் தேடினான் பெருவிரல் அடையாளத்தில் தொட்டான்.

 

அந்த அடையாளம் திரையெங்கும் விரிந்தது. திரையில் சில முகங்கள் தெரிந்தது. அவங்களோட ஒருத்தர் முகத்தை தொட்டான். அவரோட பெருவிரல் அடையாளம் திரையில் வந்து நின்றது. அந்த அடையாளத்தை அலமாரிக்குப் பக்கத்திலிருக்கிற புகைப்படக் கருவியின் கண்ணுக்கு முன்னால் நீட்டினான். கருவியிலிருந்து சில ஒளிக்கதிர்கள் திரையில் தெரிஞ்ச பெருவிரல் மீது விழுந்து மறைந்தது. கொஞ்ச நேரம் அமைதியாகத் தெரிஞ்ச அலமாரியோட கதவு தானா திறந்தது.

 

"அப்பாடாணு பெருமூச்சு விட்டான் அந்த இளைஞன் உள்ளே இருந்த பெரிய பூட்டுக்கு அருகே தன் கைக்கடிகாரத்தைக் காட்டி சில பொத்தான்களை அழுத்தினான். கைக்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட கதிர்கள் பூட்டுக்குள் நுழைய கடிகாரத்தில் தெரிஞ்ச எண்கள் அப்படியும் இப்படியும் நகர்ந்து ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்கியது.

 

அடுத்து அந்த எண்ணைத் தன் கைக்குட்டைக் கணினியில் அழுத்தினான். அவ்வளவு தான். அந்த அலமாரியில் தெரிந்த பூட்டோட ரகசிய மொழி திரையில் தெரிந்தது..

 

அந்த மொழியை நல்லா கவனிச்ச அந்த இளைஞன் அதை மறுபடியும் மனதிற்குள் சொல்லிப் பார்த்துக்கிட்டான். அப்புறம் பூட்டில் தெரிந்த கணிப்பானில் அந்த எண்களையும் எழுத்துக்களையும் அழுத்தினான்.

 

ஒரு நொடி நேரம் காத்திருந்தான். அவன் கண் முன்னே கண்ணாடித் திரையொன்று உயர்ந்து வந்தது. அந்தத் திரையில் அலமாரிக்குள் இருக்கிற பொருட்களும் அவற்றை வெளியே எடுப்பதற்கான அடையாள எண்களும் தெரிந்தது. அதற்குள் தங்க நகைகள் குவிஞ்சு கிடந்தது. ஆனா அந்த இளைஞன் அதை எடுக்கவில்லை. வங்கிகளிருந்து பணம் எடுப்பதற்கான அட்டைகளையும் வேண்டாமென ஒதுக்கி விட்டான். விலையுயர்ந்த வேறு பல பொருட்களையும் வேண்டாம் என்று நீக்கி விட்டான்.

 

கடைசியா வீட்டுக்கு வெளியே இருந்து பார்த்த அந்தப் பொருளைத் தேர்ந்தெடுத்தான். அதற்கான அடையாள எண்ணையும் எழுத்துக்களையும் அழுத்தினான். அந்தப் பொருள் நகர்ந்து வெளியே வருவதற்கு தகுந்தமாதிரி கண்ணாடித் திரை திறந்தது.

.

அவன் அந்தப் பொருளை எடுக்கும்போது அவன் கை நடுங்கியது. அது ஒரு குப்பி. அந்தக் குப்பியைத் தன்னோடு கண்களில் வைத்து ஒத்திக்கிட்டான்.

 

மெல்ல அதன் மூடியைத் திறந்து,அதற்குள்ளிருந்த பொருளை வாயில் ஊத்தினான். ஒவ்வொரு துளியையும் ரசிச்சு ரசிச்சுச் சுவைத்தான்.

 

வீட்டுக்குள் நுழைஞ்ச மாதிரியே வெளியே வந்தான். கண்ணாடிச் சாலையில் அந்த கார் சத்தமில்லாமல் காத்தைக் கிழிச்சுகிட்டு பாய்ந்தது.

 

அடுத்த நாள்...

 

எல்லா வீடுகளிலும் இருக்கிற கணினிகளில் சிவப்பு விளக்கு விட்டு விட்டு எரிந்தது.. ஒவ்வொருவரும் அந்தச் அவசரச் செய்தியை படித்தாங்க. பெருமூச்சு விட்டாங்க. நம்ம வீட்டில் நடக்க வில்லை என்று சமாதானப்பட்டாங்க. .

 

கணினியின் திரையில் தெரிஞ்ச செய்தி என்ன தெரியுமா? "சென்னையில் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு குப்பித் தண்ணீர் திருட்டுப் போனது. இரண்டு மாதம் உயிர் வாழ்வதற்கான அந்த ஜீவ அமுதத்தை உயர்ந்த ரகக் கணினியின் உதவியோடு யாரோ திருடிச் சென்றுள்ளார்கள்'' அப்படிங்கறதுதான் அந்தச் சேதி.

 

நாம தண்ணீரை வீணாக்கிட்டேயிருந்தா இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த நிலைமை நமக்கும் வரலாம்.

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
17-Apr-2020 08:04:21 ஜிடிபிபிபிக்ஷ்ரப்ஸ்ரஸ்ப்ட்ஸ்ப்ட்ஸ்ஸ்ட் said : Report Abuse
hjgvjhvhgvcyhcgchgh
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.