சீன கம்யூனிஸ்ட் கட்சி, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அரசியலில் சீர்திருத்தம் செய்யும் திட்டமில்லை. பல கட்சி ஆட்சி முறையோ, மேற்கத்திய பாணியில் அமைந்த ஜனநாயகத்தையோ, சீனா பின்பற்றாது. ஆலோசனை குழுவின் கருத்துக்களை ஏற்கும் விதத்தில் அமைந்த, ஜனநாயக முறையை பின்பற்றுவோம்.சோஷலிச கொள்கைகளை, மேலும் தீவிரமாக கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சீன மக்கள், அரசியல் விவகார ஆலோசனை குழுவின் தலைவர் தேர்வு யு செங்ஷெங் கூறியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன ராணுவம் ஆகியவற்றின் தலைவராக, கடந்த நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஜீ ஜின்பிங், வரும் 17ம்தேதி, புதிய அதிபராக, பதவியேற்க உள்ளார்.சீன மக்கள் அரசியல் விவகார ஆலோசனை குழு கூட்டம், பீஜிங் நடக்கிறது. அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஹூ ஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
|