LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

ரியாத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்..

தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் என்ற முழக்கத்துடன் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் விழாவை, ரியாத்திலுள்ள கஸர் அல் அரப் (அரபகக் கோட்டை) மண்டபத்தில் கடந்த 24 ஜனவரி அன்று நடத்தியது.

2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் அருண் சர்மா விழா இயக்குநராகப் பொறுப்பேற்று அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருந்தார்.

ஒருங்கிணைப்பாளர் அருண் சர்மா அனைவரையும் வரவேற்க, தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தனது உரையில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவை, மற்றும் இலக்கியப் பணிகளை எடுத்துரைத்தார். ரியாத் தமிழ்ச் சங்கத்தை இன மத பேதமின்றி அனைத்துத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இன்சுவை இளவல், நகைச்சுவை நாயகர் திரு. மோகன சுந்தரம் தலைமையில் "அதிமகிழ்ச்சியான வாழ்க்கை அன்றா இன்றா?"  என்ற தலைப்பில் மிகவும் ரசனையான பட்டிமன்றம் நடைபெற்றது. அன்றே என்ற அணியில் திரு.சஜ்ஜாவுத்தீன், திருமதி. ஸ்வப்னாமகேஷ், திரு. ஜாஃபர் சாதிக் ஆகியோரும் இன்றே என்ற அணியில் திரு. ஷாஜஹான், திருமதி மகேஸ்வரி நரேஷ்குமார், திரு. சிவராமலிங்கம் ஆகியோரும் கலகலப்பாகப் பேசி மகிழ்வித்தனர்.

சிறுவர் சிறுமியரின் அற்புதமான நடனங்கள் கண்ணுக்கு விருந்தளித்தன. 

விழாவில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் விழா மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு நினைவுக் கேடயங்களும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  விழாவுக்கான ஏற்பாடுகளை உயர்நிலைக் குழுவினரான செந்தில்குமார், நெளஷாத் அலீ, சதீஷ்குமார், சரவணன் ஆகியோருடன் இணைந்து அரவிந்த், சிவராமலிங்கம், வெற்றிவேல், இம்தியாஸ், ஷாஜஹான்ஜியாவுத்தீன், ஜமால்சேட், சஜ்ஜாவுத்தீன், ஷாஹுல் ஹமீத், ஜாஃபர்சாதிக்மதி, ஜவஹர், ஹைதர் அலீ, அபூபக்கர், வெங்கடேஷ் , சிக்கந்தர், ஷெரீஃப், லியோ, கஜ்ஜாலி, ஆரோக்கிய தாஸ், வேலுமணி, அலெக்ஸ்ராம்மோகன், ஷேக் தாவுத், மாலிக் இப்ராஹிம் உள்ளிட்ட செயற்குழுவினர் செய்திருந்தனர்.

காலத்துக்கும் பசுமையாக நினைவில் நிற்கும்  ஒரு விழாவாக இது அமைந்திருப்பதாக ரியாத் வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

திருமதி. பாக்கியலட்சுமி வேணு

செளதி அரேபியாவில் இருந்து

by Swathi   on 29 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.