|
||||||||
பூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம் |
||||||||
அழகு தோட்டம் அருகிலே அம்மாவுடன் நானுமே குட்டி தங்கை பாப்பாவுடன் குதூகலத்துடன் நிற்கின்றோம்
வண்ண வண்ண பூக்களாய் வானவில்லின் வர்ணத்தில்
அனைத்து வகை பூக்களும் பூத்து இங்கு குலுங்குதே
எங்கள் வீட்டை சுற்றிலும் பூச்செடிகள் வைக்கவே,
பூச்செடியின் நாற்றுக்கள் விலை கொடுத்து
வாங்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்
அழகு மலர்கள் நாற்றுடன், மற்றும் பல பதியன்கள்,
விலை கொடுத்து வாங்கியே வீடு நோக்கி செல்கிறோம்
அப்பா வேலை முடிந்து வந்த பின்
அப்பாவுடன் அனைவரும் வீட்டை சுற்றி தோட்டமிட்டு
பூச்செடியின் நாற்றுக்கள் அத்தனையும் நட்டுவோம்
இன்னும் கொஞ்ச காலத்தில் எங்கள் வீட்டை சுற்றியே
வண்ண பூக்கள் பூக்குமே !. |
||||||||
Make garden | ||||||||
by Dhamotharan.S on 09 Nov 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|