|
||||||||
புகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா? |
||||||||
![]() புகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா? புகைப்படங்கள் சொல்லும் கதை உனக்கு தெரியுமா? சரித்திரத்தின் சாத்திரங்கள் என்று புரியுமா? வாழ்ந்து மறைந்த தலைவர்களையும் உனக்கு காட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை காட்டுமே உன் அப்பா அம்மா கதையை கூட இதில் காணலாம் தாத்தா பாட்டி வளர்ந்த கதை கூட இதில் காணலாம் வருடங்களின் வாழ்க்கை கூட உனக்கு சொல்லுமே உன் குழந்தை பருவம் பற்றி உனக்கு தெரியுமா? வீட்டிலுள்ள புகைப்படத்தில் அதனை காணலாம். நீ வளர்ந்த கதை சொல்லி விடும் உனக்கு தெரியுமா? இன்னும் வளர வளர புகைப்படங்கள் எடுத்து வைத்திடு உன் நினைவுகளை பதித்து வைத்து உனக்கு காட்டுமே |
||||||||
do you know "photos"speaking" stories? | ||||||||
by Dhamotharan.S on 02 Apr 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|