LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சாலையின் பெயர் வள்ளுவர் வழி

தமிழின் ஒப்பற்ற வாழ்வியல் நூல் திருக்குறள்.  திருக்குறள் தமிழர்களுக்கானது மட்டுமல்ல. இது உலக மாந்தர்கள் படித்துப் பின்பற்றி வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய ஒப்பற்ற  வாழ்வியல் நூல்.  விரைவில் யுனெஸ்கோவில் உலக நூலாக அங்கீகாரம் பெற தமிழ்ச்சமூகம் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், வள்ளுவர் வழியைப் பின்பற்றும் அமெரிக்கத் தமிழர்கள் அங்கு வள்ளுவர் வழி என்று ஒரு சாலைக்குப் பெயர்வைத்து பெருமை சேர்த்துள்ளார்கள்.
 
அமெரிக்கா அனைத்து மொழி, கலை , பண்பாட்டையும்  ஏற்றுக்கொள்ளும் நாடு.  பல இன மக்கள் தங்கள் அடையாளங்களை , பெருமைகளை உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட மதிப்பளிக்கும் நாடு.  
 
வாசிங்டன் டிசி அருகில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.  குறிப்பாக இளையோர் அதிகம் வசிக்கும் மாநிலம்.  அங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக பல்வேறு முன்மாதிரி தமிழ் வளர்ச்சி செயல்திட்டங்களைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். குறிப்பாக 2017ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் மாநிலமாகத் தமிழர் பண்டிகை பொங்கல் திருவிழாவிற்கு அங்கீகாரம் பெற்றார்கள். இதுகுறித்து வலைத்தமிழ் நேர்காணல் செய்து வெளியிட்ட காணொளி https://www.youtube.com/watch?v=N3Nto0CbbgA.   இன்றுவரை இதைப் பின்தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. 
 
 “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்பதற்கேற்ற அடுத்த முயற்சியாக வெர்ஜினியா மாகாணத்தில்  வள்ளுவர் வழி  (Valluvar Way)  என்று ஒரு தெருவிற்குப் பெயர் சூட்ட முயற்சி எடுத்து வெற்றியும் கண்டுள்ளார்கள். இது அனைவரும் பெருமைப்படத்தக்க நிகழ்வாகும்.  தமிழால் இணைந்து தமிழ் அடையாளம் காக்கும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் இதுபோன்ற  பல ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணிகளை  வெர்ஜினியாவில் அமைந்துள்ள 700க்கும் மேற்பட்ட தமிழ்க்குழந்தைகள் பயிலும் வள்ளுவன் தமிழ்மையம் (https://www.valluvantamil.org/) என்ற தமிழ்ப்பள்ளி  தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செய்துள்ளார்கள். 
 
மேலும் வெர்ஜினியா மாநிலம் 2022 ஆண்டு முதல் ஒவ்வொரு சனவரி மாதமும் “தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.  
 
தமிழர்கள் கரம் கோர்த்து ஒற்றுமையோடு செயல்பட்டால் நம்மால் முடியாதது இல்லை  என்பதற்கு இந்த செயல்கள் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையாகாது. 
 
இதற்குச் சிந்தித்த, உழைத்த வள்ளுவன் தமிழ் மையம் தன்னார்வலர்கள், சிரிஸ் சட்ட நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியை , பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறது. 
 
 
 
SRIS law firm and Valluvan Tamil Academy worked with VA State and county officials to pass Valluvar Way at Chantilly VA. It’s approved by VA Governor on April 11th 2022 and the sign board is implemented in Sep 2022.
by Swathi   on 15 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.