|
||||||||
சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023 |
||||||||
![]() "ஜனவரி 15 ஆம் தேதி, ஸ்டார் கலைக்குழு (சியாட்டில் தமிழ் ஆர்ட்ஸ் ஆஃப் ரிதம் / Seattle Tamil Arts of Rhythm ) தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவை சியாட்டிலில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் சேர்ந்து நவாலிட்டி ஹில் பார்ம் (விவசாயத் தோட்டத்தில்) நடத்தியது. ஐந்து பொங்கல் ஐந்து (பட்டியார், சூரியன், விநாயகர், காவல் தெய்வம், குலதெய்வம்) கடவுள்களுக்காக படைக்கப்பட்டது. தெப்பக்குளம் கட்டி அதில் ஏழு கன்னிமார்கள், காதோலை கருகமணி, ஒரு படி அரிசியில் ரெட்டை மைகோதி மற்றும் மாவிளக்கு படைத்து பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் என்பது சூரியக் கடவுளான சூரியனைப் போற்றும் மற்றும் அறுவடைக் காலத்தை முன்னிட்டு தமிழ் சமூகத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பருவத்தின் முதல் அரிசியை கொதிக்க வைப்பதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது, இந்நிகழ்வில் தமிழ் பாரம்பரிய நடனங்களான பறை, ஒயிலாட்டம் மற்றும் பெண்கள் கும்மி அடித்து ஆடினார்கள். குழந்தைகள் உறியடி, பம்பரம், சாக்கு ஓட்டப் போட்டி விளையாண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய பொங்கல் விருந்து உண்டு வந்திருந்த உறவினர் மற்றும் விருந்தினர் ஊர்ப் பொங்கல் விழாவிற்கு சென்று வந்த களிப்புடன் வீடு திரும்பினர். ஸ்டார் (STAR) சியாட்டில் பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். ஸ்டார் இங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பறை, சிலம்பம், அடிமுறை, ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலைகளைக் கற்றுக்கொடுத்து தமிழர் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் நாட்டில் நாட்டுப்புறக் கலைஞர்களின் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை கல்லூரிகளில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஸ்டார் வருடா வருடம் பட்டிப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சமூகத்தை ஒன்றிணைத்து தமிழ் கலாசாரத்தை வெளிக்கொணர இந்த அமைப்பின் முயற்சிகளை கலந்து கொண்டவர்கள் பாராட்டி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. STAR தலைவர், திரு ஜெயக்குமார் கிருஷ்ணன் இவ்விழாவை முன்னின்று நடத்தினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொங்கலைக் ஒன்றிணைந்து கொண்டாடியது கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழா நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும், மேலும் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 13 Feb 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|