நல்ல தூக்கம் குறைந்தவர்களுக்கு, விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படும் என அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் மெடிக்கல் சென்டர் என்ற நிறுவனம், தூக்கம் குறைவதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, நமது தூக்கத்திற்கும், தோலுக்கும் இடையே நெருகிய தொடர்பு இருக்கிறது. குறிப்பாக நான்கு மணிநேரம் தூங்குபவர்களுக்கு, விரைவிலேயே தோல் சுருக்கம் அடைந்து, இளம் வயதிலேயே, வயதான தோற்றத்தை பெறுவார் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|