LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஷார்ஜா உலகப்புத்தக திருவிழாவில் தமிழ்ப் புத்தகங்கள்!

ஷார்ஜாவில் நடைபெறும் உலகப் புத்தகத் திருவிழாவில் தமிழ்ப்புத்தகங்கள் இடம்பெறுகின்றன. 
இது குறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்(பபாசி) சங்கத் தலைவர் வயிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உலகப் புத்தகத் திருவிழா 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் முதன்முறையாகத் தமிழ் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 
பபாசி சார்பில் ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் மாபெரும் அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெறுவதன் மூலம் சர்வதேச அரங்கில் தமிழ்ப் பதிப்புலகம் காலடி எடுத்துவைக்கிறது.

தமிழ்ப் பதிப்புலகத்தின் சார்பில் ஷார்ஜாவில் அமைக்கபடும் புத்தக அரங்கில் தமிழின் முப்பது முன்னணி பதிப்பகங்கள் ஒன்றிணைந்து தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்துகிறார்கள். 

இந்தப் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் கனிமொழி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள். சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வரையான ஆயிரக்கணக்கான முக்கிய நூல்கள் இடம் பெறுகின்றன. 

வரலாறு, அறிவியல், சமூகம், பண்பாடு, மருத்துவம், கலைகள் எனப் பல்துறை சார்ந்த முக்கிய நூல்கள் யாவும் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன. புத்தகத் திருவிழாவை ஒட்டி ஷார்ஜாவில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்புச் செய்யப் பபாசி முயற்சியெடுத்து வருகிறது. 

அமீரகத்திலுள்ள தமிழ் சங்கங்கள். இலக்கிய அமைப்புகள், ஊடகங்கள் இதற்குப் பெரும் ஆதரவு தந்துள்ளன. ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் பதிப்பாளர்கள் 20 பேர்கள் அடங்கிய குழு பயணம் செய்ய உள்ளது. 

இந்தக் குழுவோடு இணைந்து கொள்ள விரும்பும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பபாசியைத் தொடர்பு கொள்ளவும். அமீரகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இது அரியதொரு வாய்ப்பாகும். அமீரகத் தமிழ் மக்கள் யாவரும் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு வாருங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.