LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள்

அமெரிக்காவில் இன்று பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தமிழ்ப் பள்ளிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பேரவை 32 ஆண்டுகளாக சூலை மாதம் முதல்வாரம் தமிழ்மாநாட்டை நடத்தி வருகின்றது.

இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்தவர்கள் -அக்காலங்களில் இன்றுபோல் பெருமளவில் தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறாமல் இருந்தாலும் சில பெருநகரங்களில் தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள். சிகாகோ, நியூயார்க், வாசிங்டன், நியூஜெர்சி, பிலடெல்பியா போன்ற நகரங்களில் தமிழ்ச்சங்கங்கங்களை உருவாக்கியவர்கள். எந்த வசதிகளும் இல்லாத அக்காலங்களில் கையெழுத்திலேயே அறிவிப்புகளையும், இதழ்களையும், பதாகைகளையும் எழுதி நடத்தினார்கள்.

சிகாகோ தமிழ்ச்சங்கம் மிகப்பழமையானது. இந்த ஆண்டு பேரவை மாநாட்டோடு இணைந்து தங்களது பொன்விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவின் வேறு சில இந்திய மொழிக்குழுக்கள் திரைப்படக் கேளிக்கைகளையும், இந்துமதச் சடங்குகளையும் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்ச்சங்கங்களும் பேரவையும் தமிழின் தொன்மங்கள், மதச்சார்பற்றப் பண்பாடு மற்றும் தமிழர் உரிமைகள் போன்றவற்றை எப்பொழுதும் உயர்த்திப் பிடித்து வருகின்றன. அதற்கு மிகமுக்கியமான வித்து சிகாகோ தமிழ்ச்சங்கத்தில் ஊன்றப்பட்டது என்றால் மிகையாகாது. அவர்களுடைய உழைப்பும், அறிவுக்கூர்மையும் பாராட்டுக்குரியது.

சிகாகோ தமிழ்ச்சங்கம் அக்காலத்தில் மிக அழகாக தம் நிகழ்ச்சி நிரலைக் கையால் எழுதிப் பரப்புரைகளைத் தயாரித்திருப்பதை இங்கே காணலாம். நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தையும் பாருங்கள்.

by Swathi   on 14 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.