LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் தமிழர்களின் மரபிசைக் கலைநிகழ்ச்சி

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா, டெலவர் மற்றும் நியூஜெர்ஸி மாகாணங்களில் இயங்கும் தமிழ்மரபிசைக் குழுவான  'அடவு  கலைக்குழு' ,  டெலவரில் உள்ள மகாலட்சுமி கோவில்  கலாச்சார மையம் மற்றும் இந்திய அமைப்புகளின் கவுன்சிலுடன் இணைந்து  "கலைகளின் சங்கமம் 2019" விழாவை பிப்ரவரி 1-ம் தேதி நடத்தினர்.

இந்த நிகழ்வில் பாரம்பரியமான தமிழ்நாட்டுப்புற இசை மற்றும் நடனம் ஆகியவற்றை வடஅமெரிக்க மண்ணில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 11 கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் சிலர் தமிழக அரசின் பெருமை மிக்க கலைமாமணி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், நாகாசுரம், பம்பை, பறையாட்டம், ஒயிலாட்டம், கைசிலம்பம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  இந்த அனைத்து நாட்டுப் புறக்கலைகளையும் அமெரிக்காவில் ஒருசேரக்காண்பது ஒரு அரியவாய்ப்பு.

பிப்ரவரி 1 வெள்ளிக்கிழமை, 2019 மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மகாலட்சுமி கோயில் கலாச்சாரமைய மண்டபத்தில், 760 Yorklyn Road, Hockessin, DE 19707 இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் தொன்மையான மொழிகளில் இன்று வரை வாழும் மொழியாக இருப்பது தமிழ்மட்டுமே. கலை மற்றும் இசை ஆர்வலர்களும், குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய நடனங்களை நேரடியாக  காண்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது. இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். தமிழ்ப்பாரம்பரிய விழாவான பொங்கல் விழாக்காலத்தில் இந்த நிகழ்வில் பங்குபெற்று பயனடைவது மிகவும் பொருத்தமானது. 

இந்த  நிகழ்ச்சியில் டெலவர் மாகாணத்தின் நான்காவது மாவட்ட செனட்டர் லாராவ. ஸ்டர்ஜியன் மற்றும் ரெப்ரெ சென்டடிவ் கிறிஸ்டா கிரிஃபித் கலந்து  கொண்டு கலைஞர்களை சிறப்பித்தனர்.

by Swathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.