செவ்வாய்க் கிரகத்தில் சுமார் 3.7 கி.மீ தொலைவிற்கு,தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உருகினால் அந்தக் கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் ஆகும்.
|