வலைத்தமிழ் ,வள்ளுவர் குரல் குடும்பம், S2S அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ள உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு வழங்கும் முற்றோதல் சேவையை, பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. தற்போது வட அமெரிக்காவிற்கு முற்றோதல் பயிற்சி தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியை திருக்குறள் முற்றோதலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய அனுபவம் மிக்க ஆசிரியர் திருக்குறள் காமராசு அவர்கள் பயிற்சியை வழங்குகிறார். நிகழ்ச்சியை திருமிகு.சுபாசிணி டெக்சாஸ் மாகாணத்திலிருந்து ஒருங்கிணைக்கிறார்.
திருக்குறள் முற்றோதல் என்பது 1330 திருக்குறளையும் மனதில் பதியவைக்க ஒரு ஒழுங்குசெய்ப்பட்ட பயிற்சிமுறை. 1330 திருக்குறளையும் இளம் வயதில் 13 வயதிற்குள் அனைவரும் முற்றோதல் செய்யவும், கல்லூரி செல்வதற்குள் திருக்குறள் விளக்கங்களை உள்வாங்கி மேம்பட்ட வாழ்வை வாழ்வதற்கு வழி செய்யவும் அறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டு வயதுக்கு ஏற்ப பயிற்சிகள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தால் வழங்கப்படுகிறது.
வட அமெரிக்க மாணவர்கள் அவரவர் வீட்டிலிருந்தே வாரத்தில் ஒரு நாள் உங்கள் குழந்தைகள் இப்பயிற்சியில் இணைந்து திருக்குறளை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். ஆர்வமுள்ள பெரியவர்களும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம். தமிழ்-ஆங்கிலத்தில் பயிற்சிகள் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இன்றே பதிவுசெய்ய : www.ValaiTamil.com/Thirukkural/Register
|