|
||||||||
துள்ளி குதிக்குது கன்று குட்டி |
||||||||
![]() துள்ளி குதிக்குது கன்று குட்டி
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
எங்களை சுற்றி ஓடுகிறாய்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
அம்மாவின் காலை சுற்றுகிறாய்
எங்கள் கன்று குட்டி, கன்று குட்டி
மூக்கை சுழித்து முகத்தை காட்டுகிறாய்
எங்கள் கன்று குட்டி, எங்கள் கன்று குட்டி
ஆசையாய் அம்மாவும் நாக்கால் வருடுகிறாள்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
சுகமாய் நீயும் சொக்கி நின்றாய்
எங்கள் கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
துள்ளி துள்ளி குதிக்கும் உன்னை
கை கொண்டு பிடிக்க முயற்சி செய்தால்
கைகளுக்குள் சிக்காமல் ஓடுகிறாய்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
என்னை உன் நண்பனாக
ஏற்று கொள்வாயா? கன்று குட்டி
எங்கள் கன்று குட்டி. |
||||||||
My dear little cow | ||||||||
by Dhamotharan.S on 17 Jul 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|