|
|||||
வல்லாரை கீரையின் டாப் 10 பயன்கள் !! |
|||||
வல்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மையுடையது. வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை என்று பெயர் பெற்றது. இந்த கீரையின் மருத்துவ குணங்கள் பின்வருமாறு, ஞாபக சக்திக்கு இதை விடச் சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. வல்லாரை கீரை உடலில் உள்ள ரத்தத்தை சுத்திரிக்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய், பசி, தாகம், படை போன்றவற்றைக் குணப்படுத்தும். இந்த கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரைக் கீரையை தினம் ஒருகைப் பிடி அளவு எடுத்து அரைத்து, வாயில் போட்டுப் பசும்பால் குடித்து வந்தால், மாலைக் கண் பாதிப்பு படிப்படியாக அகலும். இளம் பருவத்தினர் காலை வேளைகளில் இதைப் பச்சையாக மென்று தின்று வந்தால், மூளை பலம் பெறுவதோடு மட்டுமலாமல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். வல்லாரைக் கீரையையும் மிளகையும் சேர்த்துப் பச்சையாக மென்று தின்று வந்தால், உடல் சூடு தணியும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். |
|||||
by Swathi on 06 Nov 2013 2 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|