LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வரலாறு - Tamizh History Print Friendly and PDF

பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்த சுவடுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் சார்ந்த இடங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதி உள்ளது. தமிழக திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021 ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட அகழாய்வில்,இதில், 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 533 தொல்பொருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும் கீறல் குறியீடுகளும் செங்கல் கட்டுமானங்களும், எலும்பு முனை கருவி, தங்க மூக்குத்தி, தோடு, சூது பவள மணிகள், தமிழ்ப் பிராமி எழுத்துப்பொறிப்பு, மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகைப் பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு எண்ணெய் ஜாடி பானை ஓடுகள் கிடைத்துள்ளது.

2வது கட்ட தொல்லியல் அகழாய்வில், செம்பினால் செய்யப்பட்ட மைத்தீட்டும் குச்சி ஒன்றும், செம்பினால் ஆன ஆணிகள். முக்கோண வடிவிலான தேய்ப்புக்கல், அகேட் கல்லின் மூலப்பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு முழுமை பெற்றும் பெறாமலும் கிடைத்துள்ள மணிகளானது, பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது.

இதுவரை இந்த அகழாய்வு குழியில் கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட மணி மற்றும் சூது பவள மணி, சிவப்பு நிறப் பானை ஓடுகள், கறுப்பு நிறப் பானை ஓடுகள், கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள் மற்றும் வட இந்தியாவைச் சார்ந்த டெக்கான் பானை ஓடுகள் கிடைத்தது.

இந்த அகழாய்வுப் பணிகள் 203 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. பொற்பனைக்கோட்டை 2023-2024 இரண்டாம் கட்டம் அகழாய்வில் அகழ்ந்தெடுக்கும் பணி கடந்த மே 12ம் தேதி முடிவுற்று, மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது.

மேலும், அகழாய்வுக் குழிகள் மூடும் பணியானது இன்று துவங்கியுள்ளது. பின்னர், ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று தொல்லியல் அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

by hemavathi   on 15 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
GODS OF NIGERIA PART-4 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா? GODS OF NIGERIA PART-4 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா?
Part-3 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா? GODS OF NIGERIA Part-3 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா? GODS OF NIGERIA
Part-2 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா? GODS OF NIGERIA-2 Part-2 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா? GODS OF NIGERIA-2
Part-1 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா ?/GODS OF NIGERIA Part-1 நைஜீரியாவின் மதம் தமிழ் மதமா ?/GODS OF NIGERIA
Mysterious Connection Between Tamil and Japanese ! : Hidden History ? Mysterious Connection Between Tamil and Japanese ! : Hidden History ?
Tamil-Australian Connections: Uncovering Hidden Historical Links Tamil-Australian Connections: Uncovering Hidden Historical Links
தமிழர்களுக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? Deep Talks Tamil தமிழர்களுக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? Deep Talks Tamil
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.