|
||||||||||||||||||
உச்சிமலை வீடு |
||||||||||||||||||
![]()
அது ஒரு பனிக்காலம். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது . ஒரு நாள் இரவு நேரத்ததில் ஒரு பன்னிரண்டு வயது பையன் ஒருவன் சாலையில் நடந்துகிட்டிருந்தான். அவன் ஒரு ஏழை. அவன் அணிந்திருந்த ஆடை கிழிஞ்சிருந்தது. குளிர் காற்று அவன் உ டம்பைக் குத்தியது. அவன் கை கால்கள் எல்லாம் வெட வெட வென நடுங்கியது . பற்கள் எல்லாம் கட கட வென தந்தியடித்தது . கூடவே கடுமையான பசிவேற...
சாலையில் போய்க்கொண்டிருந்த அவன் கண்ணில் பட்டுண்ணு ஒரு வெளிச்சம் தெரிந்தது . உயரமான இடத்திலிருந்து அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது . . அவன் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். உண்மையில் அது ஒரு மலை. அந்த மலையோட உச்சியில் ஒரு வீடு. அந்த வீட்டுக்குள்ளிருந்துதான் அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது .
அந்தச் சிறுவன் நடந்து நடந்து மலையின் உச்சிக்கு போய்ச்சேர்ந்தான்.. ஆகா இதென்ன அதிசயமாக இருக்கு. வீடு திறந்தே கிடக்குதுனு நினைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தான் .
வீட்டிற்குள் நல்ல சூடு. அது அந்த குளிருக்குக் கதகதப்பாக இருந்தது . அவனுடைய குளிர் விலகிப்போனது ..
அவன் அடுத்த அறைக்குள்ள நுழைந்தான். அந்த அறையில் இன்னும் அதிகமாக சூடு இருந்தது. அவனுக்கு உற்சாகமாக இருந்தது . அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு மேசை. அந்த மேசையின் மேல் ஒரு பெரிய தட்டு. அந்தத் தட்டில் ஆவி பறக்கிற சாப்பாடு. பலவைகையான உணவு வகைகள் அந்தத் தட்டிலே இருந்தது .
நாலு நாளா சாப்பிடாதவன் ஆவி பறக்கிற சாப்பாட்டைப் பார்த்தா சாப்பிடாம இருப்பானா.
அவன் ஆசை ஆசையா வாரி வாரி சாப்பிட்டான் வயிறு முட்டச் சாப்பிட்டான். மலையேறி வந்த களைப்பு அவனுக்கு. அவன் பக்கத்தில் இருந்த கட்டிலில் ஏறிப் படுத்துக்கிட்டான். அப்படியே தூங்கிவிட்டான். அடுத்த நாள்... கோழி கூவியது . கீழ்வானம் செவந்திருந்தது . எங்கும் வெளிச்சம் பரவிருந்தது . அவன் கண் விழித்தான் கட்டிலுக்கு முன்னால் இருந்த கண்ணாடியைப் பார்த்தான்
"அவனோட தோற்றத்தைப் பார்த்து ஐயோ அம்மா'' என்று அலறிவிட்டான்.
அவன் ஆளே மாறிப்போயிருந்தான். தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருந்தது . நீளமா இரண்டு பல் வாயிலிருந்து வெளியே துருத்திட்டிருந்தது ..
உடம்பெல்ல்லாம் பொசு பொசுண்ணு கருத்த முடி. ''அப்போது வீடே அதிர மாதிரி காலடிச் சத்தம் கேட்டது . "ஐயோ இது யாரோட வீடு. இப்படி நடந்து வருவது யாரு" அப்டீண்ணு நினைத்தான்.
வீடே அதிரும்படி நடந்து வந்தவன் ஓர் அரக்கன். ஒரு பனை உயரம் இருந்தான். பெரிய காளை மாட்டின் கொம்பு போல் இரண்டு கொம்புகள் தலையில் இருந்தது . கையில் ஒரு பெரிய கம்பு. தங்க வளையங்கள் போடப்பட்ட, பள பளவென மின்னற மூங்கில் கம்பு. அரக்கனோட உடம்பெங்கும் புசுபுசுணணு கருத்த முடி இருந்தது . அவன்தான், அந்த அரக்கன்தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்.
அந்த அரக்கன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
கட்டிலில் படுத்திருந்த அந்தப் பையன் அரக்கனைப் பார்த்தான். ஒரு பெரிய மாமிச மலையே பக்கத்தில் நிற் கிறமாதிரி இருந்தது .
"என் சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு, என் கட்டில் வேற ஏறிப்படுத்துகொண்டாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்" ணு கர்ஜித்தபடி பையன அடிக்க வந்தான். அந்தப் பையன் சட்டென்று கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான். அப்படியும் இப்படியும் ஓடினான். வளைந்து நெளிந்து ஓடினான். பெரிய உடம்பு இருக்கி றதால் அந்த அரக்கனால் அந்தப் பையனப் பிடிக்க முடியவில்லை .
அரக்கன் கோபத்தால் அலறினான். அந்தச் சத்தத்திலே வீடே ஆடியது . சன்னல்களும் கதவுகளும் உ டைந்து விழுந்தது .. அந்த வீட்டோட ஏதோ ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சின்னப் பெண்ணொருத்தி தப்பிச்சோம் பிழைச்சோம்ணு வெளியே ஓடி வந்தாள். அவளைப் பார்த்ததும் அரக்கனுக்கு இன்னும் கோபம் அதிகமாகியது . அவன் அச்சிறுவனை அடிக்க ஓடி வந்தான். சிறுவன் விலகி விலகி ஓட அரக்கன் துரத்த அரக்கனோட கையிலிருந்த தடி கீழே விழுந்தது .
"அந்தத் தடியிலதான் அரக்கனின் உயிர் இருக்குது. அந்தத் தடியை எப்படியாவது எடுத்து உடைத்து விடு . அரக்கன் செத்திருவான்" என்று அந்தப் பொண்ணு கத்தியது . ஓடிட்டிருந்த பையன் சட்டென திரும்பினான். அரக்கனோட கால்களுக்கு இடையே புகுந்தான். மின்னல் வேகத்தில் தடியை எடுத்தான். பல்லைக் கடிச்சபடி தொடை மேல் வைச்சு அந்தத் தடியை உடைத்தான் தங்க வளையம் போட்டு பள பள வென மின்னுகிற அந்தத் தடி சுக்கு நூறாய் உடைந்து சிதறியது .
அவ்வளவுதான் அந்த மலையே ஆடுகிற மாதிரி அலறிட்டு அந்த அரக்கன் தரையில் விழுந்து செத்துப்போனான். அந்த வீடு அப்படியும் இப்படியும் ஆடத்தொடங்கியது . வீடு விழுறதுக்குள்ளே அந்தப் பொண்ணோட கையைப் புடுச்சி இழுத்துகிட்டு வெளியே ஓடிவந்தான் . அவங்க இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே வரவும் வீடு தரைமட்டமாக விழுந்து நொறுங்கவும் சரியா இருந்தது .
அது ஒரு பனிக்காலம். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது . ஒரு நாள் இரவு நேரத்ததில் ஒரு பன்னிரண்டு வயது பையன் ஒருவன் சாலையில் நடந்துகிட்டிருந்தான். அவன் ஒரு ஏழை. அவன் அணிந்திருந்த ஆடை கிழிஞ்சிருந்தது. குளிர் காற்று அவன் உ டம்பைக் குத்தியது. அவன் கை கால்கள் எல்லாம் வெட வெட வென நடுங்கியது . பற்கள் எல்லாம் கட கட வென தந்தியடித்தது . கூடவே கடுமையான பசிவேற...
|
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|