|
||||||||||||||||||
வகுப்புக்கு தாமதம் |
||||||||||||||||||
பாபு படித்துக்கொண்டிருக்கும் அரசு பள்ளியின் நான்காம் வகுப்பு ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அவர் பெயர் ராமலிங்கம். அவர் எப்பொழுதும் மாணவர்களிடம் டிசிப்பிளின் எதிர்பார்ப்பார். சுத்தமாக இருக்கவேண்டும், சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வரவேண்டும். என்பது அவர் கட்டளை. பாபுவும், மற்ற மாணவர்களும் அவருக்கு பயந்து தினமும் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்து விடுவார்கள். இதனால் அவர்கள் வகுப்பு மாணவர்கள் எப்பொழுதும் நேரம் தவறாமையை கண்டிப்பாக பின் பற்றினார்கள். இப்படி இருக்கையில் ஒரு நாள் !
பாபு வேக வேகமாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். அவன் பள்ளியை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் போதும். அப்பொழுது ஒருவர் இவனை தாண்டி வேகமாக சென்றவர் கையில் இருந்த ஏதோ பொருளை தவற விட்டு விட்டு வேக வேகமாக சென்றார். பாபு குனிந்து அவர் தவற விட்ட பொருளை எடுத்து பார்த்தான். அது ஏதோ மருந்து சீட்டு போல இருந்தது. உடனே இவன் திரும்பி பார்ப்பதற்குள் அவர் வேகமாக சென்று மறைந்து விட்டார். பாபுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? பள்ளிக்கு நேரமாகி விட்டது. ஆனால் பாவம் அவர் ஏதோ அவசரத்தில் மருந்து சீட்டை தவற விட்டு விட்டு போய் விட்டார். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? ஒரு நிமிடம் யோசித்தான். சட்டென அவர் சென்ற திசை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
சற்று தூரம் புத்தகப்பையுடன் ஓடியவன் இரண்டு பக்கமும் தன் பார்வையை ஓட விட்டான். தூரத்தில் ஒரு மருந்துக்கடையில் இவனை தாண்டி சென்றவர், தன்னுடைய பாக்கெட்டை தடவி தேடிக்கொண்டிருப்பதை கண்டான். உடனே அவரிடம் ஓடி “சார் இதையா தேடறீங்க? அவர் தேடியது கிடைக்காமல் முகம் இருண்டு போய் நின்று கொண்டிருந்தவர் இவன் திடீரென்று மருந்து சீட்டை கொண்டு வந்து நீட்டியவுடன் அப்படியே மகிழ்ந்து விட்டார். தம்பி ரொம்ப நன்றி ! ஐயோ மருந்து சீட்டை தொலைச்சுட்டமேன்னு பயந்து கிட்டு இருந்தேன்,
சார் நீங்க எங்க ஸ்கூலை தாண்டி வரும்போது இந்த மருந்து சீட்டை தவற விட்டுட்டீங்க, அப்பத்தான் நான் ஸ்கூல் பக்கம் வந்துகிட்டிருந்தவன் நீங்க இந்த சீட்டை தவற விட்டுட்டு போறதை பார்த்துட்டு உங்க கிட்டே கொடுக்க ஓடி வந்தேன்.
ரொம்ப நன்றி தம்பி ! இந்த மருந்து அவசரமா என் பேரனுக்கு தேவைப்படுது, நான் உடனே வாங்கிட்டு கிளம்பணும், உன் பேரென்ன்? என் பேர் பாபு சார், நாலாம் வகுப்பு படிக்கிறேன், பெருமையாக சொன்னவன், திடீரென்று ஞாபகம் வந்து சார் நான் கிளம்பறேன் சார், எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு, சிட்டாக பறந்து சென்றான். அவர் பாபுவை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு நின்றார்.
பாபு வகுப்புக்குள் நுழையும்போது நேரமாகி விட்ட்து. ஆசிரியர் கோபமாய் அவனை பார்த்தார். ஏன் லேட்? சார் நான் வரும் போது…என்று இவன் நடந்த விவரத்தை சொன்னான். ஆசிரியர் அவன் சொன்னதை நம்பவில்லை. இப்படி சொன்னால் நான் நம்பி விடுவேன் என்று நினைக்காதே, ஒரு மணி நேரம் வகுப்புக்கு வெளியே நில்,
அவர் கொடுத்த தண்டனை பாபுவுக்கு வருத்தமாக இருந்தாலும், நம்மால் ஒருவருக்கு அவசரத்துக்கு உதவ முடிந்த்தே என்ற திருப்தியுடன் வகுப்புக்கு வெளியே ஒரு மணி நேரம் நின்றான்.
மறு நாள் காலையில் பாபுவின் வகுப்பாசிரியர் எல்லோருக்கும் பாடம் நட்த்திக்கொண்டிருந்தார். அப்பொழுது வாசலில் யாரோ நிற்பது போல தெரிந்தது யாரென பார்க்க தலைமையாசிரியரும், உடன் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர்.
வகுப்பாசிரியர் வெளியே வந்து இருவருக்கும் வணக்க்ம் சொல்ல தலைமையாசிரியர் உங்க வகுப்புல இருக்கற பாபுவை பார்க்கறதுக்கு வந்திருக்காரு. இவர் நம்ம மாவட்ட கல்வி அதிகாரி, சார் இவர் எதுக்கு பாபுவை..? ஏதாவது தப்பு பண்ணிட்டானோ என்ற பயத்தில் வகுப்பாசிரியர் கேட்கவும் கல்வி அதிகாரி சிரித்து கொண்டு பயப்படாதீங்க், நான் அந்த பையனை பாராட்டிட்டு போலாமுன்னுதான் வந்திருக்கேன். நேத்து ஒன்பது மணிக்கு எங்க அப்பா என்னோட பையனுக்கு மருந்து ஒண்ணு வாங்க வந்தவரு அவசத்துல மருந்து சீட்டை இந்த ரோட்டுல விட்டுட்டு போயிட்டாரு. இதை அந்த பையன் பார்த்து இது “மருந்து சீட்டுன்னு” தெரிஞ்சு அவரை தேடி போய் கொடுத்திருக்கான். அவனுக்கு நான் நன்றி சொல்லணும், அவ்வளவுதான்.
பாபு நேற்று சொன்னது உண்மைதான், நாம்தான் நம்பாமல் அவனுக்கு தண்டனை கொடுத்து விட்டோம், வருத்தப்பட்ட வகுப்பாசிரியர் பாபுவை கூப்பிட்டார். பாபுவை அந்த கல்வி அதிகாரி பாராட்டிவிட்டு விடை பெற்று சென்றார்.
வகுப்பாசிரியர், பாபு என்னை மன்னித்துக்கொள், நீ நேத்து சொன்னதை நம்பாமல் உனக்கு தண்டனை கொடுத்துட்டேன். வருத்தப்பட்டு சொல்ல, சார், தயவு செய்து அப்படி சொல்லாதீங்க சார், நான் வகுப்புக்கு தாமதமா வந்த்துக்குத்தான் எனக்கு தன்டனை கொடுத்தீங்க. அது என்னுடைய தப்புத்தானே, உதவி செஞ்சதனாலதான் லேட்டாச்சு அப்படீங்கறதுனால் எனக்கு மனசுக்கு சந்தோசமாத்தான் இருந்துச்சு.
வெரி “ஸ்மார்ட் பாய்” அருகில் இருந்த தலைமையாசிரியரும், வகுப்பாசிரியரும் அவனை தட்டி கொடுத்தார்கள்.
நீங்கள் எப்படி குட்டீஸ் பாபுவைப்போலத்தானே ? |
||||||||||||||||||
late entry by class room | ||||||||||||||||||
by Dhamotharan.S on 25 May 2019 2 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|