LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

வானவில்லைக் காணவில்லை

 

"அதோ அங்கே பார்! வானத்தில் ஒரு வானவில்''  என்று யாராவது சொல்றதைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீங்க? உடனே ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்ப்பீங்க. அப்படித்தானே!
"வானவில்லோட அழகே அழகுதான். கண்ணைக் கவரும் வண்ண ஜாலம். இறைவன் பூமிக்கு இட்ட பாலம். உலகிலுள்ள அழகையெல்லாம் உருக்கி கடவுள் உருவாக்கியது...'' அப்படீண்ணு பல கவிஞர்கள் பலவிதமாக வானவில்லோட அழகைப் பாடியிருக்காங்க. ஆனால் அந்த வானவில் பண்டைக்காலத்தில முழு வட்டவடிவமாக இருந்திச்சுங்கறது உங்களுக்குத் தெரியுமா?
கடவுள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போதுதான் வானவில்லைப் படைச்சார். ரொம்ப கவனத்தோடு, அழகாக படைச்சார். கடவுளோட படைப்பில அவருக்கு மிகவும் பிடிச்சது இந்த வானவில் மட்டும்தான். கடவுளோட எந்தப் படைப்பிலும் ஒரு குறையும் இருக்காதில்லையா? அதனால்தான் கடவுள் வானவில்லை முழு வட்டமா படைச்சாரு.  
.
தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட... காலத்தில் வாழந்தவங்க வானவில்லை முழு வட்டமாகத்தான் பார்த்தாங்க. வட்ட வடிவில் இருந்த வானவில் எப்படி இப்படி பாதியாச்சு? அது ஒரு பெரிய கதை. உங்கள மாதிரி ஒரு குறும்புக்கார பையன் செய்த வேலை அது. அந்தச் பையனும் வட்டவடிவ வானவில்லைப் பார்த்தான். அவ்வளவு தான் அந்த வானவில்லின் மீது ஆவனுக்கு கொள்ளை ஆசை வந்தது.
"அம்மா, அப்பா... ஓடி வாங்க. இந்த வானவில்லை எடுத்துத் தாங்க. எனக்கு அதை வச்சு விளையாடணும்...'' அப்படீண்ணு ஊரே கூடுமளவுக்குக் கத்தினான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. மகனோட தேவையைக் கேட்டு வாய் விட்டுச் சிரிச்சாங்க.
"வானத்தில் இருக்கறத உனக்கெப்படி புடிச்சு தரமுடியும்? அது எட்ட முடியாத தூரத்திலல்ல இருக்கு" அப்படீண்ணு ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னாங்க. அதைக் கேட்ட அந்தப் பையனோட அழுகை இன்னும் அதிகமாச்சு. ரொம்பச் சத்தம்போட்டு அழத் தொடங்கினான். அப்படி அழுதுகிட்டிருக்கும்போது அவன் மனசுல ஒரு திட்டம் உருவாச்சு.
அடுத்த நாள்...
யார்கிட்டயும் சொல்லாமல் கொள்ளாமல் அந்தப் பையன் வீட்டை விட்டுப் புறப்பட்டான். வானவில் இருக்கற திசையை பாத்து நடக்கத் தொடங்கினான். நடந்தான்... நடந்தான்... நாள் கணக்கில் நடந்தான்.
எங்கிருந்தோ ஒரு நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்து அவன் மூக்குக்குள்ள நுழைஞ்சுது.
"ஆகா! அருமையான மணம். இதுவரைக்கும் நான் இப்படியொரு மணத்தை நுகர்ந்ததேயில்லை''  அப்படீண்ணு அந்தப் பையன் நெனச்சுக்கிட்டான்.
வானவில்லை நெருங்க நெருங்க அந்நறுமணம் அவன் மூக்கைத் துளைச்சது. வானவில்லுக்கும் மணமிருக்கும்ணு அப்பத்தான் அவனுக்குத் தெரிஞ்சுது.
வானவில்லைப் பிடிக்ணுங்கற அவனோடு ஆசை மேலும் மேலும் கூடிக்கிட்டே வந்துச்சு. நடந்துகிட்டிருந்தவனோட கண்ணில ஒரு பெரிய மலை தெரியத் தொடங்கிச்சு. அந்த மலைக்கு மகுடம் வச்சதுமாதிரி அந்த வட்ட வடிவ வானவில் இருந்திச்சு.
"அந்த மலைக்கு மேலே ஏறிட்டா வானவில்லைப் பிடிச்சிடலாம்ணு சந்தோஷமாக வேகம் வேகமாக நடக்கத் தொடங்கினான்.
கடைசியில மலைகிட்ட வந்துட்டான். மலைக்கு மேலயும் ஏறிட்டான். . கையை நீட்டினான். ஆனால் வானவில் எட்டல. அது இன்னும் எத்தனையோ தூரத்திலெ, உயரத்தில் இருந்திச்சு. அது அந்தப் பையனைப் பார்த்து சிரிக்கறமாதிரி தோணுச்சு.
"ச்சே! இதுக்காகவா நாள்கணக்காக நடந்து வந்தேன். கஷ்டப்பட்ட மலையேறினேன்" அப்படீங்கற நெனப்பு வந்ததும் அவனுக்கு அழுகை பொத்துகிட்டு வந்துச்சு. அவன் அழுதான். அழுதான் அழுதுகிட்டே இருந்தான். நாள் கணக்கில்... மாதக் கணக்கில் அழுதான்.
அந்த அழுகையைக் கேட்டு கடவுளால் கண் விழிக்காமல் இருக்க முடியுமா? பையன் கிட்டதான் வராம இருக்க முடியுமா? அவர் தம் திருக்கண்களைத் திறந்தாரு.பையன்கிட்ட வந்தாரு "சிறுவனே, உனக்கு என்ன வேணும்? ஏன் இங்கு வந்து இப்படி அழுது கொண்டே இருக்கிறாய்" ணு கேட்டார். அதைக் கேட்ட அந்தப் பையன் "எனக்கு இந்த வானவில் வேண்டும். புடுச்சுக் குடுங்க. எனக்கு எட்டமாட்டேங்குது" அப்டீண்ணான்.
கடவுளுக்கு ஒரே கவலையா போச்சு. தனக்கு ரொம்பப் பிடிச்சதை இந்தப் பையன் கேட்கிறானே. எப்படி அத இந்தப் பையனுக்குக் கொடுக்கறது? ஆனால் இந்தப் பையனோ கிடைக்காமல் போகமாட்டான் போலிருக்குதே! என்ன செய்யலாம்ணு யோசிச்சார். முழு வட்ட வானவில்லை பாதியாக உடைச்சுச் அந்தப் பையனுக்குக் கொடுத்தார். கொடுத்து விட்டு மறுபேச்சுக்குக்கூட காத்திருக்காம மாயமா மறஞ்சு போய்ட்டாரு.
பாதி வானவில்லை கெடச்சிதனாலே பையனுக்குக் கோபம் கோபமாக வந்திச்சு. கையில் இருக்கற வானவில்லோட நறுமணம் அவனுக்கு சந்தோஷத்தைத் தரல. 
வானவில்லு பஞ்சு மாதிரி இருக்கறது அவனோட கைவிரலுக்குத் தெரியல. அவன் கண்கள் வானத்திலிருந்த பாதி வானவில்லையே பார்த்தது. அவன் மனசுல கோபத்தீ கொழுந்துவிட்டெரிஞ்சுது.
"இந்தப் பாதி வானவில் யாருக்கு வேணும்ணு கோபமா கத்திட்டு அதைப் பிச்சுப் பிச்சுப் வீசிகிட்டே மலையை விட்டு இறங்கினான். விடுவிடுவென நடக்கத் தொடங்கினான். நடக்கற வழியெல்லாம் வானவில்லைப் பிச்சு பிச்சு வீசிகிட்டே வந்தான். திரும்பிப் பாக்கணுங்கற நெனப்பே அவனுக்கு வரல. அவன் திரும்பிப் பார்த்திருந்தாண்னா அந்த அதிசயத்தைப் பாத்து ரசிச்சிருக்கலாம். அவன் கோபம் மாயமாய் மறைஞ்சிருக்கும். ஆனால் அவன் திரும்பிப் பாக்கலையே!
அச்சிறுவன் பிய்த்துப் பிய்த்து வீசிய வானவில் என்னாச்சு தெரியுமா? அழகான பூக்களாக மாறிச்சு. நறுமணம் வீசும் பல வண்ணப் பூக்களாக மாறிச்சு!! அந்த அற்புதக் காட்சியைப் பாக்கறதுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.
வானத்தில் பாதியாக இருக்கற வானவில்லோ பையன் பிச்சு பிச்சு வீசறதப் பாத்து பயந்து கிட்டு ஓடி மறஞ்சிட்டுது. யாரும் பாக்க முடியாத ஓரிடத்தில் ஒளிஞ்சிருந்துச்சு. வானத்திற்கு வந்து அழகிய காட்சிகளைக் பாக்கணுங்கற ஆசையிருந்தாலும் பயம் தடுத்திச்சு. எங்கே தன்னையும் பிடிச்சு அது போலப் பிச்சு வீசிடுவானோண்ணு பயந்திச்சு. இருந்தாலும் தன்னோட ஒடம்பில் பாதியாக இருந்த, இப்போது பூக்களாக மாறியிருக்கிற வானவில்லோட நினைவு அடிக்கடி வர்றதைத் தடுக்க முடியாம தவிக்கும். மழை பெய்த பிறகு வெளிச்சம் வந்தால் உடனே தன்னோட ஒடம்பிலிருந்து பிச்செடுத்த அந்தப் பாதி வானவில்லைப் பாக்க வானத்துக்கு வரும். தரையில பூக்களாக மாறியிருக்கிற தன்னோட பாதியைப் பார்க்கும். வானவில்லு வானத்துக்கு வந்ததும் கொழந்தைகளும் வெளியே வந்திருவாங்களே. அந்தப்பாதி வானவில் கொழந்தைகளையும் பாக்கும்.அதில அந்தக்குறும்புகக்காரப் பையன் இருக்கறதா நெனச்சுக்கும். உடனே மறஞ்சுக்கும்.
வானவில் வானத்தில நெலயாக நிக்காம ஏன் உடனே மறயுதுங்கற காரணத்தைப் புரிஞ்சுகிட்டீங்களா?

 

"அதோ அங்கே பார்! வானத்தில் ஒரு வானவில்''  என்று யாராவது சொல்வதை  கேட்டால் நீங்கள் என்ன செய்வீரகள்? உடனே ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்ப்பீர்கள். அப்படித்தானே!

 

"வானவில்லோட அழகே அழகுதான். கண்ணைக் கவரும் வண்ண ஜாலம். இறைவன் பூமிக்கு இட்ட பாலம். உலகிலுள்ள அழகையெல்லாம் உருக்கி கடவுள் உருவாக்கியது...'' என்றுபல கவிஞர்கள் பலவிதமாக வானவில்லோட அழகைப் பாடியிருக்காங்க. ஆனால் அந்த வானவில் பண்டைக்காலத்தில முழு வட்டவடிவமாக இருந்தது என்று  உங்களுக்குத் தெரியுமா?

 

கடவுள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போதுதான் வானவில்லைப் படைத்தார். ரொம்ப கவனத்தோடு, அழகாக படைத்தார். கடவுளோட படைப்பில அவருக்கு மிகவும் பிடித்தது இந்த வானவில் மட்டும்தான். கடவுளோட எந்தப் படைப்பிலும் ஒரு குறையும் இருக்காதில்லையா? அதனால்தான் கடவுள் வானவில்லை முழு வட்டமா படைத்தார். 

.

தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட... காலத்தில் வாழந்தவங்க வானவில்லை முழு வட்டமாகத்தான் பார்த்தாங்க. வட்ட வடிவில் இருந்த வானவில் எப்படி இப்படி பாதியாச்சு? அது ஒரு பெரிய கதை. உங்களை மாதிரி ஒரு குறும்புக்கார பையன் செய்த வேலை அது. அந்தச் பையனும் வட்டவடிவ வானவில்லைப் பார்த்தான். அவ்வளவு தான் அந்த வானவில்லின் மீது அவனுக்கு கொள்ளை ஆசை வந்தது.

 

"அம்மா, அப்பா... ஓடி வாங்க. இந்த வானவில்லை எடுத்துத் தாங்க. எனக்கு அதை வைத்து விளையாடணும்...'' என்று ஊரே கூடுமளவுக்குக் கத்தினான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. மகனோட தேவையைக் கேட்டு வாய் விட்டுச் சிரிச்சாங்க.

"வானத்தில் இருக்கிறதை  உனக்கு எப்படி பிடித்து தரமுடியும்? அது எட்ட முடியாத தூரத்தில் அல்லவா இருக்கு" அப்படீண்ணு ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னாங்க. அதைக் கேட்ட அந்தப் பையனோட அழுகை இன்னும் அதிகமானது. ரொம்பச் சத்தம்போட்டு அழத் தொடங்கினான். அப்படி அழுதுகிட்டிருக்கும்போது அவன் மனசுல ஒரு திட்டம் உருவானது.

 

அடுத்த நாள்...

 

யார்கிட்டையும் சொல்லாமல் கொள்ளாமல் அந்தப் பையன் வீட்டை விட்டுப் புறப்பட்டான். வானவில் இருக்கிற திசையை பார்த்து நடக்கத் தொடங்கினான். நடந்தான்... நடந்தான்... நாள் கணக்கில் நடந்தான்.

 

எங்கிருந்தோ ஒரு நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்து அவன் மூக்குக்குள்ள நுழைந்தது.

 

"ஆகா! அருமையான மணம். இதுவரைக்கும் நான் இப்படியொரு மணத்தை நுகர்ந்ததேயில்லை''  அப்படீண்ணு அந்தப் பையன் நினைத்து கொண்டான்.

 

வானவில்லை நெருங்க நெருங்க அந்நறுமணம் அவன் மூக்கைத் துளைத்தது. வானவில்லுக்கும் மணமிருக்கும் என்று அப்பத்தான் அவனுக்குத் தெரிந்தது.

 

வானவில்லைப் பிடிக்கணும் என்று அவனோடு ஆசை மேலும் மேலும் கூடிக்கிட்டே வந்தது. நடந்துகிட்டிருந்தவனோட கண்ணில் ஒரு பெரிய மலை தெரியத் தொடங்கியது. அந்த மலைக்கு மகுடம் வைத்தது மாதிரி அந்த வட்ட வடிவ வானவில் இருந்தது.

 

"அந்த மலைக்கு மேலே ஏறிட்டா வானவில்லைப் பிடிக்கலாம் என்று சந்தோஷமாக வேகம் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

 

கடைசியில் மலைகிட்ட வந்துட்டான். மலைக்கு மேலயும் ஏறிட்டான். . கையை நீட்டினான். ஆனால் வானவில் எட்டவில்லை. அது இன்னும் எத்தனையோ தூரத்தில், உயரத்தில் இருந்தது. அது அந்தப் பையனைப் பார்த்து சிரிக்கறமாதிரி தெரிந்தது.

 

"ச்சே! இதுக்காகவா நாள்கணக்காக நடந்து வந்தேன். கஷ்டப்பட்ட மலையேறினேன்" அப்படீங்கற நினைப்பு வந்ததும் அவனுக்கு அழுகை பொத்துகிட்டு வந்தது. அவன் அழுதான். அழுதான் அழுதுகிட்டே இருந்தான். நாள் கணக்கில்... மாதக் கணக்கில் அழுதான்.

 

அந்த அழுகையைக் கேட்டு கடவுளால் கண் விழிக்காமல் இருக்க முடியுமா? பையன் கிட்டதான் வராம இருக்க முடியுமா? அவர் தம் திருக்கண்களைத் திறந்தார்.பையன்கிட்ட வந்தார் "சிறுவனே, உனக்கு என்ன வேணும்? ஏன் இங்கு வந்து இப்படி அழுது கொண்டே இருக்கிறாய்" என்று கேட்டார். அதைக் கேட்ட அந்தப் பையன் "எனக்கு இந்த வானவில் வேண்டும்.  எனக்கு எட்டமாட்டேங்குது" என்றான்.

 

கடவுளுக்கு ஒரே கவலையா போனது. தனக்கு ரொம்பப் பிடித்ததை இந்தப் பையன் கேட்கிறானே. எப்படி அதை இந்தப் பையனுக்குக் கொடுக்கிறது? ஆனால் இந்தப் பையனோ கிடைக்காமல் போகமாட்டான் போலிருக்குதே! என்ன செய்யலாம் என்று யோசித்தார். முழு வட்ட வானவில்லை பாதியாக உடைத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தார். கொடுத்து விட்டு மறுபேச்சுக்குக்கூட காத்திருக்காமல் மாயமாக மறைந்தே போய்ட்டார்.

 

பாதி வானவில் கிடைத்தால் பையனுக்குக் கோபம் கோபமாக வந்தது. கையில் இருக்கிற வானவில்லோட நறுமணம் அவனுக்கு சந்தோஷத்தைத் தர வில்லை.

 

வானவில் பஞ்சு மாதிரி இருக்கிறது அவனோட கைவிரலுக்குத் தெரிய வில்லை. அவன் கண்கள் வானத்திலிருந்த பாதி வானவில்லையே பார்த்தது. அவன் மனசுல கோபத்தீ கொழுந்துவிட்டெரிந்தது.

 

"இந்தப் பாதி வானவில் யாருக்கு வேணும் என்று கோபமா கத்திட்டு அதைப் பிச்சுப் பிச்சுப் வீசிகிட்டே மலையை விட்டு இறங்கினான். விடுவிடுவென நடக்கத் தொடங்கினான். நடக்கிற வழியெல்லாம் வானவில்லைப் பிச்சு பிச்சு வீசிகிட்டே வந்தான். திரும்பிப் பாக்கணுங்கிற நினைப்பே அவனுக்கு வரவில்லை. அவன் திரும்பிப் பார்த்திருந்தாண்னா அந்த அதிசயத்தைப் பார்த்து ரசிச்சிருக்கலாம். அவன் கோபம் மாயமாய் மறைஞ்சிருக்கும். ஆனால் அவன் திரும்பிப் பாக்கலையே!

 

அச்சிறுவன் பிய்த்துப் பிய்த்து வீசிய வானவில் என்னாச்சு தெரியுமா? அழகான பூக்களாக மாறியது. நறுமணம் வீசும் பல வண்ணப் பூக்களாக மாறிச்சு!! அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கிறதுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

 

வானத்தில் பாதியாக இருக்கிற வானவில்லோ பையன் பிச்சு பிச்சு வீசுறதைப் பார்த்து பயந்து கிட்டு ஓடி மறைந்து கொண்டது. யாரும் பார்க்க முடியாத ஓரிடத்தில் ஒளிஞ்சிருந்தது. வானத்திற்கு வந்து அழகிய காட்சிகளைக் பார்க்கணுங்கிற ஆசையிருந்தாலும் பயம் தடுத்து விட்டது. எங்கே தன்னையும் பிடிச்சு அது போலப் பிச்சு வீசிடுவானோண்ணு பயந்திருந்தது. இருந்தாலும் தன்னோட உடம்பில் பாதியாக இருந்த, இப்போது பூக்களாக மாறியிருக்கிற வானவில்லோட நினைவு அடிக்கடி வருவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும். மழை பெய்த பிறகு வெளிச்சம் வந்தால் உடனே தன்னோட உடம்பிலிருந்து பிச்சு எடுத்த அந்தப் பாதி வானவில்லைப் பார்க்க வானத்துக்கு வரும். தரையில் பூக்களாக மாறியிருக்கிற தன்னோட பாதியைப் பார்க்கும். வானவில்லு வானத்துக்கு வந்ததும் குழந்தைகளும் வெளியே வந்திருவாங்களே. அந்தப்பாதி வானவில் குழந்தைகளையும் பார்க்கும்.அதில் அந்தக்குறும்புகக்காரப் பையன் இருக்கிறானா என்று நினைக்கும். 

 

வானவில் வானத்தில் நிலையாக நிர்க்காமல் ஏன் உடனே மறையுது என்ற காரணத்தைப் புரிஞ்சுகிட்டீங்களா?

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.