|
||||||||||||||||||
வேண்டாம் தாங்க மாட்டீங்க… |
||||||||||||||||||
![]() அன்றைக்கும் வழக்கம்போல சேவல் கூவியது. கீழ்வானம் சிவந்தது. பறவைகெல்லாம் இறை தேடிப் பறந்தது.
ஆனா ரவியால் எந்திருக்க முடியவில்லை. காலை தூக்க முயற்சி செய்தான் ஆனால் அசைய வில்லை, கையும் அதே மாதிரித்தான். இமைகள் அசைந்தால்தானே கண்களைத் திறந்து பாக்க முடியும். உதடுகள் பிரிந்தால்தானே பேசமுடியும். கை கால், கண், வாய் எதுவும் வேலை செய்ய வில்லை. காது மட்டும் லேசா வேலை செய்தது அதனால் காற்று வீசற சத்தம் கேட்குது, பறவைகள் கத்துவது லேசா கேட்குது. ரவி நம்ம கதை முடிந்தது என்று நினைத்த ரவி அமைதியாப்படுத்திருந்தான். அப்போ யார் யாரோ சண்டை போடற சத்தம் மெல்லமா கேட்டது.
அவன் காதுகள் இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கிட்டான். "இங்க பாருங்க, நீங்க எல்லாம் என்னதான் சொன்னாலும் சரி உங்களையெல்லாம் நான்தான் சுமந்திட்டிருக்கின். நான் இல்லேண்ணா நீங்க இல்லை. நல்லா புரிஞ்சுக்குங்க. ரவி நடக்கறது விழையாடறது எல்லாம் என்னால் தான். அதனாலே நான்தான் பெரியவன். எனக்கு முன்னாடி நீங்க எல்லாம் ஒன்றுமில்லை'' கால்கள் வீராப்போடு பேசியது.
"கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் இல்லாட்டி ரவி எங்காவது குண்டு குழியில்,
கிணத்துல, குளத்தில விழுந்திடுவான். நான் இல்லேண்ணா எப்படி ரவியாலே விழையாட முடியும்? என் உலகத்தையே பாக்க முடியாதே. அதனாலே நான் சின்னதா இருந்தாலும் நான்தான் ரவிக்கு ரொம்ப ரொம்ம முக்கியமானவன்'' கண்கள் பேசியது.
"இங்க பாருங்க, எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கணும். பள்ளிக்கூடம் போறது படிக்கறதுக்காக, விழையாடுறதுக்கா, அதுக்கு நான் வேண்டும், எதாவது பொருளை எடுக்கணுமா? நான் வேண்டும். எழுதணுமா நான் வேண்டும். சாப்பிடுணுமா நான் வேண்டும். மட்டுமல்ல கால் கைகள் கழுவுண்ணும் யாரும் சொல்ல மாட்டாங்க, கை ,கால்கள்தான் சொல்லுவங்க. நான் தான் உங்களையெல்லாரையும் விடவும் பெரியவன்'' கை வீம்பாப் பேசியது.
"ஒரு நிமிடம் நான் சொல்றதைக் கேளுங்க. உங்களையெல்லாம் வேலை செய்ய வைக்கிறதே நான்தான் நா இல்லாட்டி உங்களுக்குச் சாப்பாடு இல்லை. அதுமட்டுமா? ஒரு மனுஷனால் தனியா வாழ முடியாது. வீட்டிலும் நாட்டிலும் நிறைய மக்கள் இருக்காங்க. அவங்ககூடப் பேசணும் ,பழகணும் அதுக்கு ஒருத்தர் நினைக்கிறதை அடுத்தவங்களுக்குச் சொல்லணும். அதுக்கு நான் வேண்டும்'' வாயும் சண்டையில் சேந்தது.
"என்ன எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்களா, யார் பெரியவன்ணு முடிவு பண்றதுக்கு எதுக்கு இத்தனை தூரம் பேசணும். இப்ப நான் ஒரு நிமிஷம் வேலைநிறுத்தம் செய்யப்போறேன். அப்ப உங்க நிலைமை என்னாகுதுண்ணு பாருங்க'' அப்படிண்ணு சொல்கிட்டே மூக்கு சுவாசிக்கறதை ஒரு நிமிடம் நிறுத்தியது. அவ்வளவுதான்.
ரவிக்கு மூச்சு முட்டியது. கைகளை படபடணு அடித்தான். கால்களை மேலும் கீழும் ஆட்டினான். இமைகள் படபடண்ணு ஆடியது. உடம்பு வில்லு மாதிரி வலைந்தது. "ஐயோ... வேண்டாம் வேண்டாம். நாங்க எல்லாம் சண்டையை நிறுத்திட்டோம். நீ தான் பெரியவன். நீதான் பெரியவன். நாங்க ஓத்துக்கறோம்'' எல்லாரும் ஒரே குரலில் சொன்னாங்க.
இங்க பாருங்க... இனி நான் பெரியவன் நீ பெரியவன்ணு சண்டை போட்டீங்க. நான் ஒரேடியாக வேலை நிறுத்தம் செஞ்சிருவேன். எல்லாரும் பெரியவங்கதான். கை செய்யற வேலையைச் காது செய்ய முடியாது. கண் செய்யற வேலையை கால் செய்ய முடியாது. காது செய்ய வேலையை என்னால் செய்ய முடியாது. அதனால் அவங்வங்க வேலைகளை ஒழுங்கா செய்தா ரவியால் சுகமா இருக்க முடியும். ரவி சுகமா இருந்தா நாமளும் நல்லா இருக்க முடியும்'' அப்படீண்ணு மூக்கு சொல்லியது.
மூக்கு சொன்னதை எல்லாரும் ஒத்துகிட்டாங்க. எல்லோரும் அவங்கவங்க வேலையைச்செய்யத் தொடங்கினாங்க.
ரவி கண்விழித்தான். வழக்கமா செய்யுற வேலைகளைச் செய்யத் தொடங்கினான். உடல் ஊறுப்புகளோட சண்டை அவனுக்கு ஒரு கனவு மாதிரி இருந்தது. |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|