LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல விசா தேவை இல்லை

 

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.
****************************************
இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டு அகதிகளாக வெளியேறினர். ஆனால் இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கிறது. அதை வளப்படுத்த அவ்வப்போது பல முயற்சிகளை செய்து வருகிறது.
****************************************
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்குள் செல்ல விசா தேவைப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்ல எளிமையான முறையில் விசா பெற்றுவிடலாம். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.
******************************
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை (2023 அக்டோபர் 24-ம் தேதி) தெரிவித்தார்.
****************************
அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் அடுத்த ஆண்டு 2024 மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.

இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டு அகதிகளாக வெளியேறினர். ஆனால் இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கிறது. அதை வளப்படுத்த அவ்வப்போது பல முயற்சிகளை செய்து வருகிறது.

ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்குள் செல்ல விசா தேவைப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்ல எளிமையான முறையில் விசா பெற்றுவிடலாம். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.

சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை (2023 அக்டோபர் 24-ம் தேதி) தெரிவித்தார்.

அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் அடுத்த ஆண்டு 2024 மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது கவனிக்கத்தக்கது.

 

by Kumar   on 01 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.