LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

AI தொழில்நுட்பத்தால் எந்தெந்த பணிகளுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை? இந்த பட்டியல்ல உங்கள் வேலை இருக்கா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. இதன் வளர்ச்சியை நாம் ஊக்குவிக்கும் அதே வேளையில் மனிதர்களின் வேலைகளை இது பறித்துவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 

அண்மைக் காலமாக ஐடி நிறுவனங்களில் நிகழ்ந்த பணி நீக்கங்களே இதற்கு உதாரணம். என்ன தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் சில வேலைகளை அதனால் செய்ய முடியாது. நிச்சயம் அதற்கு மனித வளம் மட்டுமே தேவைப்படும். அத்தகைய வேலைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

 

சுகாதாரத் துறை

 

மருத்துவர்கள், செவிலியர்கள், தெரபிஸ்ட் மற்றும் பிற சுகாதாரத் துறை சார்ந்த பணிகளை நிச்சயம் செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியாது. மனிதர்களிடம் பேசி பழகிப் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய துறை என்பதால் இத்தகைய பணிகளைச் செய்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை மிகச் சிக்கலான ஒன்று.

 

படைப்பாற்றல் கொண்ட வேலைகள்

 

படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படும் பணிகளைச் செயற்கை நுண்ணறிவால் திறம்பட எதிர்கொள்ள முடியாது. கலை சார்ந்த பணிகள், எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆகிய வேலைகளுக்குப் படைப்பாற்றல் மிக முக்கியம். அது செயற்கை நுண்ணறிவுக்குக் கைகூடாது.

 

 மனநலம் சார்ந்த பணி

 

மனநல ஆலோசகர்கள், சமூக சேவைப் பணிகள் மற்றும் ஆலோசகர்கள் பணிகள் என்பது மனிதர்களின் மன நிலையைப் புரிந்து கொள்வது, உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்ப செயல்படுவது ஆகியவற்றை உள்ளடக்கியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தற்போதைக்கு இத்தகைய புரிதல்களை ஏற்றுக் கொண்டு அனுதாபம் உள்ளிட்டவற்றோடு செயல்பட முடியவில்லை.

 

மனித வளத்துறை

 

HR பணிகள் ஆட்சேர்ப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் பணியாளர்கள் நல வாழ்வு உள்ளிட்ட பலவிதமான தனிப்பட்ட மற்றும் மக்கள் சார்ந்த பணிகளைக் கையாளக்கூடிய ஒரு பணி இதற்கு உணர்ச்சி நுண்ணறிவு மிக அவசியம். செயற்கை நுண்ணறிவுக்கு அந்தத் திறன் இல்லை என்பதால் மனித வளத்துறை சார்ந்த பணிகளை அவற்றால் மேற்கொள்ள முடியாது.

 

திறன் வாய்ந்த பணிகள்

 

எலக்ட்ரீசியன், பிளம்பிங், கார்பெண்டர்ஸ் மற்றும் மெக்கானிக் பணிகள் அனுபவம் சார்ந்த மற்றும் திறன் சார்ந்த பணிகள். நிஜ உலகில் பிரச்சினையைப் புரிந்து அதற்கு ஏற்ப செய்ய வேண்டிய பணிகள் என்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நிச்சயம் இதனைச் செய்ய முடியாது.

 

ஆசிரியர் மற்றும் வழிகாட்டி பணிகள்

 

கல்வியாளர்கள் குறிப்பாக வழிகாட்டுதல் பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை வலியுறுத்தும் வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாது. ஏனெனில் இதில் மனிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டிய பணி இது.

 

அவசரச் சேவைகள்

 

 தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள், காவல்துறை பணி போன்ற அவசரநிலை பணிகளில் விரைவான சிந்தனையும் தகவமைப்புத் தன்மையும் தேவை. மாறுபட்ட மற்றும் கணிக்க முடியாத சூழல்களில் பணியாற்றக்கூடிய திறன் தேவை இது தற்போதைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாத ஒரு பணி.

 

ஒரே மாதிரியான பணிகளை , மனிதர்கள் அளித்த உள்ளீடுகளுக்கு ஏற்பவும் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளைக் கொண்டும் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செயல்பட முடியும். உணர்வுகள் சார்ந்த, சூழல் சார்ந்த முடிவெடுக்க வேண்டிய பணிகளை மனிதர்களைப் போலச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கையாள்வது என்பது சாத்தியமில்லை.

 

நன்றி - Good returns tamil

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.