LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலக மனநல தினம்

மனித வாழ்வில் மனசுதான் மிகப்பெரிய பொக்கிஷம்   என்றால் அது மிகையில்லை. காரணம் எல்லா       சந்தர்ப்பங்களிலும் மனசு மட்டுமே முக்கிய நபராக இருந்து எல்லாவற்றையும் சந்திக்கிறது. சோகம்,       அழுகை, இன்பம், துன்பம், ஏமாற்றம் என அனைத்து நினைவுகளையும் அசைபோடுகிறது. மனசு            சாதாரணமாகவும் ஆழ் மனசு என்ற ஒன்றும் நம்மை ஆட்கொண்டுள்ளது.
******************************* 
சாதாரண நினைவுகளை மனசு கடந்து சென்றுவிடும். சில ஆழ்மன பதிவுகள் மனிதனை புத்தி பேதலிக்கவும் செய்யும் என்பதுதான் உண்மை. அதனாலேயே அனுபவசாலிகள் எதையும் மனசுல போட்டு           குழப்பிக்காதீங்க பிரியா விடுங்கன்னு சொல்வதுண்டு.
**********************************
ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத பிரச்சினைகள் அவர்களை வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் கொண்டுசென்று நிறுத்திவிடும் என்பது நாம் அறிந்ததே. அதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிய நபர் மன அதிர்வுக்கு ஆளாகி புத்தி பேதலித்து மனநலம் பாதிக்கப்பட்டு தன் சுயநினைவை இழக்கிறார். அப்படியானால் உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சீராக இயங்கினாலும் மனம் தன்னுடைய சுயத்தை இழந்தால் எந்த மனிதனும் நடைபிணம்தான்.
***********************************
இப்படிப்பட்ட மனசை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். ஏதோ பிரமைபிடித்தவர்கள்போல் இருப்பவர்களை பார்த்து இப்படிசொல்வதுண்டு பாவம் அவங்க மனசை ஏதோ   ஒன்னு பாதிச்சிருக்குன்னு.  
************************************
இத்தனை அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த மனசை பாதுகாக்க பக்குவப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு   ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
********************************
மனநல பாதிப்புக்கான காரணிகள்
***************************
தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம். போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம். வலை தளங்கள் மற்றும் சோஷியல் மீடியா எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குறியதாக உள்ளது. மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள் விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள் மரபியல் பிறழ்ச்சிகள்,மூளைக்காயம், போதைப் பழக்கம், தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு  என பட்டியலிடலாம்.
***********************************
உலக அளவில் 18 வயதுக்கு மெற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது.
******************************
வேலையின் மீது ஆர்வமின்மை
******************************
வேலையில் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென வேலையின் மீது ஆர்வமின்றி இருப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்புடையதாக இருக்காது. அப்படியிருக்கும்போது, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
******************************
பேச்சில் மாற்றங்கள்
******************************
மனச்சிதைவு நோய் இருந்தால் பேச்சு வித்தியாசமாக இருக்கலாம், எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. பணியை விடுவதற்கு, உடன் பணியாற்றுபவர்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைப் போன்ற வித்தியாசமான காரணங்களைக் கூறுவார்கள்.
********************
தூக்கமின்மை
*************************
வயதானவர்களுக்கு கவனமின்மை, ஞாபக மறதி போன்றவை இருந்தால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரை, பிரசவத்திற்குப் பிறகான மனச் சோர்வு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இத்தகைய மனச்சோர்வு இயல்பாகவே பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்டு சில வாரங்களில் குணமடைந்து விடும். ஆனால், இன்றைய சூழலில் சிலருக்கு அதுவே நீண்டகாலம் நீடிக்கும்போது குழந்தைக்கே அபாயமாகக்கூட அது மாறலாம்.
***********************************
எப்போதும் பதற்றம், பயம்
*******************************
சின்ன விஷயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும் பயத்தோடுமே அணுகினால் நிச்சயம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.எந்த வேலையையும் படபடப்புடனேயே செய்வது, செய்ய வேண்டிய வேலையை நினைத்து, நடக்க வேண்டியதை நினைத்து அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பிருந்தே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாவது, சிறு விஷயமாகவே இருந்தாலும் அதிர்ந்துவிடுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
***************************
உணர்ச்சிக் கொந்தளிப்பு
****************************
சிலர் திடீரென கோபப்பட்டு கத்துவார்கள், கண்ணீர் விட்டு அழுவார்கள். தீவிர மன உளைச்சல், கோபம் போன்ற இயல்புக்கு மாறான மனநிலைக்கு ஆளாவார்கள். இப்படி இயல்பான மனநிலையில் இருந்து திடீரென வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவது மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
***************************
விடியாத இரவென்பது இல்லை
***************************************
இந்த உலகத்தில் விடியாத இரவென்பது இல்லை. மனித வார்வில் முடியாத பிரச்சினைகள் என்பது எதுவும் இல்லை. மனம் விட்டு பேசுவோம். மற்றவர்களை நேசிப்போம். எந்த பிரச்சினைகளையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அதை நமக்கு    நம்பகமானவர்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கலாம். அதன் மூலம் அதிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கும். மனம் என்பது விலை மதிக்கமுடியாத ஒன்று அதை நாம்தான் பாதுகாக்கவேண்டும். நடந்துவிட்டதற்காக அதையே நினைத்து புலம்பாமல் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கலாம். தவறு நடந்துவிட்டால் திருத்த முடிந்தால் திருத்திக்கொள்ளலாம். திருத்தவே முடியாது என்றால் அந்த தவறால் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக சந்தித்து வருத்தம் தெரிவிக்கலாம். அவர்களை சமாதானப்படுத்தலாம்.
***********************************
மனசே உங்கள் கேடயம்
*******************************
பாலியல் ரீதியாக ஒரு பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் அதை கோழையாக பாவித்து அச்சப்படதேவையில்லை. எல்லாவற்றுக்கும் சந்தர்ப்ப சூழல் என்பது ஒன்று உள்ளது. அதை கடந்து  தான் எப்படிப்பட்ட மேதையும் வந்தாக வேண்டும். எல்லா பிரச்சினைகளையும் எல்லோரும்  சந்தித்ததே. ஆகவே அந்தரங்கத்தை குறித்து வெளியரங்கமாக்கிவிடுவேன் என ஒருவர் மிரட்டினால் அதற்காக வாழ்க்கையை இழக்கும் அளவுக்கு போய்விடாதீர்கள். மனதில்      போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். உங்கள் அச்சம் அவர்களை இன்னும் அதிகமாக மிரட்டச்சொல்லும். எதிர்த்து நில்லுங்கள். மனசே உங்கள் கேடயம், மனசே போரிடும் வாள், ஆரோக்கியமான மனசே உங்களை வாழவைக்கும்.மனித வாழ்வில் மனசுதான் மிகப்பெரிய பொக்கிஷம்   என்றால் அது மிகையில்லை. காரணம் எல்லா       சந்தர்ப்பங்களிலும் மனசு மட்டுமே முக்கிய நபராக இருந்து எல்லாவற்றையும் சந்திக்கிறது. சோகம்,       அழுகை, இன்பம், துன்பம், ஏமாற்றம் என அனைத்து நினைவுகளையும் அசைபோடுகிறது. மனசு            சாதாரணமாகவும் ஆழ் மனசு என்ற ஒன்றும் நம்மை ஆட்கொண்டுள்ளது.

சாதாரண நினைவுகளை மனசு கடந்து சென்றுவிடும். சில ஆழ்மன பதிவுகள் மனிதனை புத்தி பேதலிக்கவும் செய்யும் என்பதுதான் உண்மை. அதனாலேயே அனுபவசாலிகள் "எதையும் மனசுல போட்டு  குழப்பிக்காதீங்க பிரியா விடுங்கன்னு" சொல்வதுண்டு.

ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத பிரச்சினைகள் அவர்களை வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் கொண்டுசென்று நிறுத்திவிடும் என்பது நாம் அறிந்ததே. அதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிய நபர் மன அதிர்வுக்கு ஆளாகி புத்தி பேதலித்து மனநலம் பாதிக்கப்பட்டு தன் சுயநினைவை இழக்கிறார். அப்படியானால் "உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சீராக இயங்கினாலும் மனம் தன்னுடைய சுயத்தை இழந்தால் எந்த மனிதனும் நடைபிணம்தான்".

இப்படிப்பட்ட மனசை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். ஏதோ பிரமைபிடித்தவர்கள்போல் இருப்பவர்களை பார்த்து இப்படிசொல்வதுண்டு பாவம் அவங்க மனசை ஏதோ   ஒன்னு பாதிச்சிருக்குன்னு.

இத்தனை அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த மனசை பாதுகாக்க பக்குவப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு   ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

மனநல பாதிப்புக்கான காரணிகள்

தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம். போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம். வலை தளங்கள் மற்றும் சோஷியல் மீடியா எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குறியதாக உள்ளது. மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள் விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள் மரபியல் பிறழ்ச்சிகள்,மூளைக்காயம், போதைப் பழக்கம், தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு  என பட்டியலிடலாம்.

உலக அளவில் 18 வயதுக்கு மெற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது.

வேலையின் மீது ஆர்வமின்மை

வேலையில் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென வேலையின் மீது ஆர்வமின்றி இருப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்புடையதாக இருக்காது. அப்படியிருக்கும்போது, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பேச்சில் மாற்றங்கள்

மனச்சிதைவு நோய் இருந்தால் பேச்சு வித்தியாசமாக இருக்கலாம், எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. பணியை விடுவதற்கு, உடன் பணியாற்றுபவர்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைப் போன்ற வித்தியாசமான காரணங்களைக் கூறுவார்கள்.

தூக்கமின்மை

வயதானவர்களுக்கு கவனமின்மை, ஞாபக மறதி போன்றவை இருந்தால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரை, பிரசவத்திற்குப் பிறகான மனச் சோர்வு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இத்தகைய மனச்சோர்வு இயல்பாகவே பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்டு சில வாரங்களில் குணமடைந்து விடும். ஆனால், இன்றைய சூழலில் சிலருக்கு அதுவே நீண்டகாலம் நீடிக்கும்போது குழந்தைக்கே அபாயமாகக்கூட அது மாறலாம்.

எப்போதும் பதற்றம், பயம்

சின்ன விஷயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும் பயத்தோடுமே அணுகினால் நிச்சயம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.எந்த வேலையையும் படபடப்புடனேயே செய்வது, செய்ய வேண்டிய வேலையை நினைத்து, நடக்க வேண்டியதை நினைத்து அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பிருந்தே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாவது, சிறு விஷயமாகவே இருந்தாலும் அதிர்ந்துவிடுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

உணர்ச்சிக் கொந்தளிப்பு

சிலர் திடீரென கோபப்பட்டு கத்துவார்கள், கண்ணீர் விட்டு அழுவார்கள். தீவிர மன உளைச்சல், கோபம் போன்ற இயல்புக்கு மாறான மனநிலைக்கு ஆளாவார்கள். இப்படி இயல்பான மனநிலையில் இருந்து திடீரென வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவது மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

விடியாத இரவென்பது இல்லை

இந்த உலகத்தில் விடியாத இரவென்பது இல்லை. மனித வார்வில் முடியாத பிரச்சினைகள் என்பது எதுவும் இல்லை. மனம் விட்டு பேசுவோம். மற்றவர்களை நேசிப்போம். எந்த பிரச்சினைகளையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அதை நமக்கு    நம்பகமானவர்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கலாம். அதன் மூலம் அதிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கும். மனம் என்பது விலை மதிக்கமுடியாத ஒன்று அதை நாம்தான் பாதுகாக்கவேண்டும். நடந்துவிட்டதற்காக அதையே நினைத்து புலம்பாமல் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கலாம். தவறு நடந்துவிட்டால் திருத்த முடிந்தால் திருத்திக்கொள்ளலாம். திருத்தவே முடியாது என்றால் அந்த தவறால் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக சந்தித்து வருத்தம் தெரிவிக்கலாம். அவர்களை சமாதானப்படுத்தலாம்.

மனசே உங்கள் கேடயம்

பாலியல் ரீதியாக ஒரு பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் அதை கோழையாக பாவித்து அச்சப்படதேவையில்லை. எல்லாவற்றுக்கும் சந்தர்ப்ப சூழல் என்பது ஒன்று உள்ளது. அதை கடந்து  தான் எப்படிப்பட்ட மேதையும் வந்தாக வேண்டும். எல்லா பிரச்சினைகளையும் எல்லோரும்  சந்தித்ததே. ஆகவே அந்தரங்கத்தை குறித்து வெளியரங்கமாக்கிவிடுவேன் என ஒருவர் மிரட்டினால் அதற்காக வாழ்க்கையை இழக்கும் அளவுக்கு போய்விடாதீர்கள். மனதில்   போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். உங்கள் அச்சம் அவர்களை இன்னும் அதிகமாக மிரட்டச்சொல்லும். எதிர்த்து நில்லுங்கள். மனசே உங்கள் கேடயம், மனசே போரிடும் வாள், ஆரோக்கியமான மனசே உங்களை வாழவைக்கும்.

by Kumar   on 11 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.