LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலக ஓசோன் தினம்

உலக ஓசோன் தினம், ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது , இது ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
++++++++++++++++++
ஓசோன் அடுக்கு, முதன்மையாக மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளால் (O3) ஆனது, சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்களுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது.
++++++++++++++++++++++++
1970 மற்றும் 1980 களில் , கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர்.
+++++++++++++++++++++++++
ஓசோனில் ஓட்டை விழுந்ததால் அதிலிருந்து புறஊதாக்கதிர்கள் நேரிடையாக பூமியை தாக்கும் என்றும் இதனால் மனித இனத்துக்கு ரோபத்து என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது அவர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது.
+++++++++++++++++++++++
கதிர்வீச்சு தடுப்பு
++++++++++++++++++++
பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் (O2) அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக (O3) மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.
+++++++++++++++++++++++
ஓசோன் ஓட்டை
+++++++++++++++++++++++
குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகிறது. இதை ‘ஓசோன் ஓட்டை' என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு என்று சொல்லலாம். இதனால் புறஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன.
+++++++++++++++++++++++++
ஓசோன் பாதிப்புக்கு காரணம்
++++++++++++++++++++++
உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளி யேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
++++++++++++++++++++
நோய் தாக்குதல்
+++++++++++++++++++
இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல மெலிவு விரிவடைவது தடுக்கப்பட்டுவிட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை. அதனால், பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும்.
++++++++++++++++++++++++++
ஓசோன் படலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்புக்கான ஒரு பொறிமுறையை நிறுவ சர்வதேச சமூகத்தை தூண்டியது. இது ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான வியன்னா மாநாட்டில் முறைப்படுத்தப்பட்டது  , இது 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1985 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அதுமுதல் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
++++++++++++++++
இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், நிம்மதியுடன் வாழ துாய காற்று முக்கியமானது.அதனைப்பெறுவதற்கு மரங்கள், பசுமையான செடிகளும் வளர்க்கப்படவேண்டும். இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே பூமியில் வாழும் நாம் அந்த பூமிக்கு செய்யும் மாற்றுக் கடனாக சுற்றுப்புறத்தை பாதிக்க கூடிய காரணிகளை முழுவதுமாக தவிர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை எளிமையாக வாழ்ந்தோமானால் நிச்சயம் ஓசோன் படலத்திற்கு பாதிப்பில்லை.

by Kumar   on 17 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.