LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலகில் முதல்முறையாக பின்லாந்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட்

 

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆக.28-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.
**************************************
பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
**************************************
முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபின்டிசிசி பைலட் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.
*****************************************
பாஸ்போர்ட் புத்தகம் தேவையில்லை
**********************************************
டிஜிட்டல் பாஸ்போர்ட் என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தனியாக பாஸ்போர்ட் புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை.
********************************************
எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சோதனை அடிப்படையில் பிப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆக.28-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.

பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபின்டிசிசி பைலட் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.

பாஸ்போர்ட் புத்தகம் தேவையில்லை

டிஜிட்டல் பாஸ்போர்ட் என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தனியாக பாஸ்போர்ட் புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை.


எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சோதனை அடிப்படையில் பிப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.

 

by Kumar   on 05 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.