LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப் படுவீர்கள்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

"சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள்’’ என ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்து இருந்தனர்.

இது பற்றிய தகவல் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிடைத்தது. இதையடுத்து  ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில், `ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாட்டு அரசுகள், தங்கள் நாடுகளின் எல்லை வழியாக யாரையாவது அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்தால், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டில் கவுதமாலாவுக்கு அமெரிக்கா 248 மில்லியன் டாலர், ஹோண்டுராசுக்கு 175 மில்லியன் டாலர், எல்சல்வடாருக்கு 115 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 18 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.