LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டு கோட்டை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு துறையூர் பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டைகள் இருந்த தடயங்களை கண்டுபிடித்து உள்ளார்.

இது குறித்து ஆய்வாளர் பாபு கூறியதாவது:

தமிழகத்தில் கிபி 17-ம் நூற்றாண்டில் பாளையக் காரர்களின் ஆட்சி பரவலாக காணப்பட்டது. பாளையக்காரர்கள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சை பகுதிகளில் பாளையங்கள் எனப்படும் நிலப்பரப்பினை ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள் ஆவார்கள். பாளையக்காரர் ஆட்சி முறை பாளையப்பட்டி எனப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

பாளையக்காரர்கள் வரலாற்றை ஆராய்ந்தோமானால் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி, தஞ்சை மராட்டியர் ஆட்சி, ஆற்காட்டு நவாபின் ஆட்சி காலத்தில் இங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் போர்கள் நடைபெற்ற சூழலில் பாளையக்காரர்கள் மதுரை மண்டலத்தில் குறுநில மன்னர்களாக உருவானார்கள்.

இவர்கள் தமக்கென தனிஆட்சி, நீதிமுறைகளை உருவாக்கி இருந்தனர். இவர்கள் பேரரசுகளுக்கு வரி செலுத்தியும், படை உதவிகளும் செய்து வந்தனர். நீதி தவறாத ஆட்சி செய்து உள்ளனர். கிபி 1801ம் ஆண்டு சென்னை ஆங்கிலேயே கவர்னர் எட்வர்ட் கிளைவ் ஆணையின்படி தமிழகத்தில் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்தார்கள் ஆட்சி உருவானது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் ஊரின் மேற்குப் பகுதியில் ஆற்றின் கரையோரமாக சிதைந்த நிலையில் கோட்டையின் இடிபாடுகளும் மற்றும் நீண்ட மதிற்சுவர் போன்றவையும் காணப்படுகிறது. 

தற்போது இந்த இடம் இப்பகுதி மக்களால் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது பெரிய அளவிலான செங்கற்கள், மண்பாண்ட ஓடுகள் மற்றும் சந்தனம் அரைக்கும் வட்டக்கல் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கிருந்த முட்புதர்களை அகற்றியபோது நீண்ட அகலமான மதிற்சுவர் ஒன்று காணப்பட்டது. அது செங்கல் மற்றும் காரையால் கட்டப்பட்டு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. 

இது இங்கு ஆட்சி புரிந்த பாளையக்காரர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். அக்காலத்தில் நடைபெற்ற போரினாலோ அல்லது இயற்கைச் சீற்றத்தினாலோ இது அழிக்கப்பட்டு இருக்கலாம். 

மேலும் இந்த இடத்தின் சற்று தூரத்தில் கோட்டப்பாளையம் என்ற கிராமம் காணப்படுகிறது. இது இப்பகுதியில் அக்காலத்தில் கோட்டை இருந்துள்ளது என்பதை உணர்த்துகின்றது.  அந்தக் கால மக்களின் வாழ்விடங்களும் இருந்துள்ளதை இங்கு கிடைத்து உள்ள தொன்மை தடயங்கள் உறுதி செய்கின்றன.  வரலாற்று ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தமிழரின் வரலாற்றினை வெளிக் கொண்டு வரவேண்டும்.  

இவ்வாறு தஞ்சை தமிழ்பல்கலைக்கழக தொல்லியல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பாபு தெரிவித்து உள்ளார்.

by Mani Bharathi   on 01 Nov 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கஜா புயல் பாதித்த இடங்களில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்  அறிவிப்பு! கஜா புயல் பாதித்த இடங்களில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா காணாத சேமிப்பு கிடங்கு கஜா புயலில் கடும் சேதம்! ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா காணாத சேமிப்பு கிடங்கு கஜா புயலில் கடும் சேதம்!
கஜா புயல் நிவாரண தேவை மற்றும் உதவி செய்பவர்களுக்கான இணையதளம் கஜா புயல் நிவாரண தேவை மற்றும் உதவி செய்பவர்களுக்கான இணையதளம்
தென்னகப் புயல் பாதிப்பு மீட்பு மக்கள் குழு தென்னகப் புயல் பாதிப்பு மீட்பு மக்கள் குழு
கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை! கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை!
கஜா புயலுக்குப் பலியானவர் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு! கஜா புயலுக்குப் பலியானவர் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம்! கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம்!
கஜா புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு! கஜா புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு!
கருத்துகள்
04-Nov-2018 09:57:38 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். தமிழகத்தில் திருச்சி மாவட்டம்,;முசிறியில் பாளையக்காரர்களின் கோட்டை கொத்தளங்கள்,;மதிற்சுவரை கண்டுபிடித்த தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கும், அதன் தலைவர் திரு பாபு அவர்களுக்கும் நன்றி. நம் தமிழகத்தில் பெரும்பாலான கோட்டைகள், இயற்கை சீற்றத்தை விட போரினாலேயே அழிந்தது என்பது தான் உண்மை. நம் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் அகழ்வாராய்சி பணி நடைபெறும் போது அக்கால மக்களின் கட்டிட கலை, முதுமக்கள் தாழி போன்றவை மிக சாதரணமாக காணப்படுகிறது.இதை இன்னும் முயன்று தொல்லியல் துறை வெளியிட வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.