LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

1989ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்

 

தொகுதிகள்:1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் 
தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அரசியல் நிலவரம்:தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜியார்) டிசம்பர் 24, 1987 அன்று 
மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சர்ச்சை எழுந்தது. ஆர். எம். 
வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. 
ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை 
ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை 
வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா 
ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு 
உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி 
பெற்றார்.தேர்தல் முடிவுகள்: ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் 
மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. 
இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான 
அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.ஆட்சி அமைப்பு:திமுக தனிப்பெரும்பான்மை பெற்று கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் 
முதல்வரானார்.

தொகுதிகள்:

 

     1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அரசியல் நிலவரம்:

 

     தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.

 

     புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார்.

 

தேர்தல் முடிவுகள்:

 

     ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.

 

ஆட்சி அமைப்பு:

 

     திமுக தனிப்பெரும்பான்மை பெற்று கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

by Swathi   on 25 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.