இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லட்சுமி, திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான். எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்
பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார்.
இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் வீரபத்திரராக தோன்றுகிறார். ரதி, மன்மதனை தன் கணவனாக அடைந்தது“இத்தல இறைவனை வழிபட்டு தான். வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம் மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர். |