இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில
வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச்
சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது.சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு
உடையவை. சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம்.
வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர். சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது.
கருவறை சதுரமானது.சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை. சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. |